பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 அவரிடம் போகிறாயோ என்று தெளிவுபடுத்துகிறது. "நட்டார் இல் என்பதோ' என்று குறட்பா கூறுகிறது. 'உன்னோடு கலந்து எண்ணுபவர் யாருண்டு" என்று நான்காம் குறட்பா விளக்குகிறது. ஏனெனில் அவரைக் கண்டபோது புலக்கக் கருதாமல் சேர்ந்து கொள்ள நெஞ்சம் கருதிவிட்டதாம். ஐந்தாம் பாடல் நெஞ்சினுடைய நிலையினை நன்கு தெளிவுபடுத்துகிறது. தலைவரைப் பெறாதபோதும் அஞ்சு கிறது, பெற்றபிறகும் அஞ்சுகிறதாம்-மறுபடியும் பிரிந்து விடுவாரோ என்று நினைத்து அஞ்சுகிறதாம். தனியே இருந்து நினைத்தால் தன்னைத் தின்னுவது போல் நெஞ்சம் துன்பம் கொடுக்கிறதென்று ஆறாம் குறட்பா கூறுகிறது. "நாணும் மறந்தேன்'-அதாவது நாணத்தையும் மறந்து விட்டேன் என்று கூறுவதை ஏழாம் பாடல் குறிக்கிறது. அவரைமட்டும் மறக்கவில்லை என்கின்றாள். எள்ளின் இளிவாம்’ என்று தொடங்குகிற எட்டாம் பாடல், தானே தனது கணவரை இகழ்ந்து பேசுதல் தனக்கே குறைவானபடி யால் பெருமையாகவே பேசுகிறேன் என்று சொல்லுவதைக் கூறுகின்றது. "துன்பத்திற்கு யார் துணையாக இருப்பார்தன்னுடைய நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் என்பதை, 'யாரே துணையாவார்' என்ற ஒன்பதாம் பாடல் விளக்கம் செய்கிறது. பத்தாம் பாடல், தன்னுடைய நெஞ்சமே சுற்றத்தாராக ஆகாதபோது, அயலார் அயலாராக இருப்பதைச் சொல்ல வும் வேண்டுமோ என்று உணர்த்துகிறது. நெஞ்சொடு கிளத்தல்-என்ற அதிகாரமும் உண்டு.