பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அழுக்காறு என்பது அதனைக் கொண்டவனை அதுவே அழித்துவிடும். பிறர் அவனுக்குக் கெடுதி செய்யவேண்டி யதும் இல்லை. அவ்வளவு கொடியது பொறாமைக் குணம் என்பதாகும். அதுசாலும்' என்பது, இக் கருத்தினைக் கூறும். ஐந்தாம் குறட்பாவில் காண்க. தன்னைச் சூழ்ந் திருப்பவர்கள் சுற்றத்தாராகும். அவனுக்கு நேர்ந்த தீமை சுற்றத்தினரையும் கெடுத்துவிடும். சுற்றமும் கெடும் என்ப தால் அவன் கெடுவது சொல்லாமலே விளங்கும் என்பதனை ஆறாம் குறட்பா உணர்த்திற்று. உலகில் இயல்பான வழக்கு, சீதேவி, மூதேவி, என்று கூறப்படுவதாகும். மூதேவி சீதேவிக்கு மூத்தவள் என்பது வழக்கில் பேசப்படுவது. பொறாமையுடையவனுக்குச் செய்யவள் தனது மூத்தவளைக் காட்டிவிடும் என்று ஏழாம் குறட்பா கூறும். தவ்வை என்பது மூத்தவள்; திருமகள் இருக்க மாட்டாள். வறுமை அவனைப் பிடித்துக் கொள்ளும். 'அழுக்காறு' என்பது எவ்வளவு கொடியது என்பதை உணர்த்தவே எட்டாம் குறளில் பாவி என்றார். ஒன்பதாவது குறட்பா ஆழ்ந்த சிந்தனைக்குரியதாக அமைந்துள்ளது. உலகில் காணும்போது, பொறாமை உள்ளவன் ஆக்கம் பெற்றும் தூய உள்ளம் படைத்தவன் கேடடைந்து இருப்பதும் காணப்படுகிறது என்று பேசப் படுவதுண்டு. அவ்வாறு காணுவது உண்மையுமாகும் . இதனைச் சிந்தித்துப் பார்த்தல் வேண்டும். ஆக்கம் என்பது அளவில் பெரியதைக் குறிக்கின்றது. இவ்வுலக வாழ்க்கை பழவினையின் அ ைம ப் பி லும் அமைந்துள்ளதாகும். அதனையே இயற்கையென்று கூறுவோம். செயற்கை என்னும் முயற்சியினைவிடப் பன்மடங்கு பெரிதானது என்று கூறவேண்டும், "இருவேறு உலகத்து இயற்கை” என்று காணப்படும் குறட்பாவினை ஊழ் என்ற அதிகாரத்தில் கண்டு தெளிதல் வேண்டும்.