பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 26. புலால் மறுத்தல் ஊன் உண்ணுவதை ஒழித்தலாகும். கொலைப் பாவத் திற்குக் காரணம் ஆதல் அதுவேயாகும். அருளுடையார்க்கு இது பொருந்துவதன்று. இதனை விலக்குதல் வேண்டும். துறவற நெறியில் நின்றார் கொள்ள வேண்டிய சிறந்த நோன்புகளில் ஒன்றாகும். அருளுடைமையினைக் கூறி இதனைக் கூறுதல் அறிந்துணரத் தக்கது. மறுத்தல்' என்று முடிவது இவ்வொரு அதிகாரமேயாகும். . . . . தனது ஊனைப் பெருக்க பிறிதொன்றின் ஊனைத் தின்றல் அருள் இருப்பதற்குச் சிறிதும் பொருந்தாதென்ப தனை முதற் குறட்பா கூறும். பொருளாட்சி அருளாட்சி" என்பதனைப் பிரித்துக் காட்டிவிளக்கம் தருவது இரண்டாம் குறட்பாவாகும். ஊன் தின்றாராயினும், உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆளுவது குற்றமில்லை. என்போரை மறுத்து, குற்றம் உண்டு என்பதனை முதலி ரண்டு குறட்பாக்களும் கூறுகின்றன. ஊன் தின்பார்க்கு, அருள்வாராது.இருக்காது-என்பது குறிப்பாகக் கொள்ளுதல் வேண்டும் என்ற கருத்து உணர்த்தப்பட்டது. மூன்றாம் குறட்பா, ஊன் தின்பவர்களையும் படை கொண்டவர்கலளயும் ஒப்பிட்டுக் காட்டி உண்மையினை விளக்குகின்றது. . நான்காம், ஐந்தாம், பாடல்கள், கொலைப்பாவம் கொன்றார்மேல் நிற்பதால் ஊன் உண்பார்க்கு பாவம் இல்லை என்பாரை மறுத்து, அவர்களுக்கும் பர்வம் உண் டென்பதனை உணர்த்துகின்றன. கொலை செய்யப்: படுவதன் கிாரணத்தினை ஆறாம் குறட்பா விளக்கு கின்றது. ஏழாம் பாடல் புலால் உண்பதன் இழிதன்மை யினைக் கூறுகிறது. பிணத்தினை உண்பதாகும். இதனை