பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 அஞ்ஞானம் நீங்கி மெய்ஞ்ஞானம் பிறக்கும் என்பதனை ஏழாம் குறட்பா விளக்குகின்றது. இத்தகைய உண்மைகள் அனுபவத்தால் தெரிந்து கொள்ளப்பட வேண்டியவைகளா கும். உடம்பும் பொன்னிறமாகும் என்பதும் கருத்தாகும். உலகோர் வணங்கிப் போற்றுவதும் தவத்தாரையேயாகும் என்பதனை எட்டாம் பாடல் குறிக்கின்றது. நோன்பு நோற்பதே தவம் என்று விளக்க வேண்டி, ஒன்பதாம் குறட்பா நோற்றலின்’ என்று கூறுகின்றது. கூற்றுவனைக் கடத்தல் முடியாது என்பது தோன்ற 'குதித்தலும்’ என்று ஒன்பதாவது குறட்பா குறிக்கின்றது. கை கூடும் சிறப்பான ஆற்றல்கள் பலவுண்டு என்பது குறிப்பாகும். தவத்திற்கு உரு-தவம் உடையார்க்கு ஆகும் . மறந்தார் கொல் . தவத்தான் வரும் எய்தலான் . தம் கருமம் செய்வார் - ஒளிவிடும் - எல்லாம் தொழும் .கை கூடும் . நோற்பார் சிலர் - என்பன, தவத்தின் சிறப்பினை :பும், தவத்தின் பயனையும், தவம் செய்வார்களை உலகமே வணங்கும் என்பதனையும் பிற உண்மைகளையும் .உணர்த்துவனவாகும். 28. கூடா ஒழுக்கம் தாம் விட்ட காம இன்பத்தினை மனவலி இன்மையால் பின்னும் விரும்புமாறு தோன்ற அவ்வாறே எண்ணி தவத்திற்குப் பொருத்தமில்லாத தீய ஒழுக்கத்தில் நடிந்து கொள்ளுதலாகும். இது விலக்குதற்கு உரியதாகும். இல்லறத்தாருக்குப் பிறனில் விழையாமை, கூறியதை ஒப்பிட்டுப் பார்த்தல் பொருந்துவதாகும். 'கடிடிா ஒழுக்கம்" என்பது போல, கூடாநட்பு' என்றவொரு அதிகாரமும் இருக்கின்றது. ஒழுக்க முடைமை' என்ற அதிகாரம் ஒழுக்கத்தின் சிறப்பினைக் கூறுவது போல