பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கூத்தாட்டம் நடைபெறுகின்ற இடம் அவை என்னும் காட்சி இரண்டாம் குறட்பாவில் அழகுற அமைந்து செல்வத்தின் செயல் எடுத்துக்காட்டப்பட்டது. நாள் என்பது உயிரினை அறுக்கும் வாள் என்ற எடுத்துக்காட்டு நான்காம் குறளில் காணப்படுகின்றது. முட்டையும் பறவையும் உவமையாகக் காட்டப்பட்டு உயிர் உடம்பு தன்மைகளை எட்டாம் குறட்பா விளக்குகின்றது. உறக்கமும் விழிப்பும் இறப்பும் பிறப்பும் போல்வன என்ற ஆழ்ந்த உண்மையினை ஒன்பதாம் குறட்பா கூறும். நிலையாமை என்ற அதிகாரத்தில் காணப்படும் குறட்பாக்கள் அனைத்தும், உயிர், உடம்பு, பிறப்பு, இறப்பு என்னும் இவை போன்றவைகளின் கருத்துரைகளைக் கூறுவதால், ஆழ்ந்த பல உண்மைகளை தம்முள் அடக்கிக்கொண் டுள்ளன. ஆதலால் விரிவான விளக்கங்களை மெய்ந் நூல்களாகக் கூறப்படும் பிறவற்றிலும் கண்டு தெளிக. 35. துறவு அதாவது புறமாகிய செல்வத்தினிடத்தும் அகமாகிய யாக்கையினிடத்தும் கொண்டுள்ள பற்றினை விடுதலாகும். 'நிலையாமை" என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் போலவே, இவ்வதிகாரத்தின் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் பேருண்மைகள் பலவற்றையும் குறிப்பாக உணர்த்துவதால் விளக்கங்களையும் தெளிவினையும் மெய்ந்நூல்கள் பலவற்றி லும் கண்டு உணர்ந்து அறிதல் நலமாகும். யான் என்பது அகப்பற்று எனவும் எனது என்பது புறப் பற்று எனவும் கூறப்படும். அவைகளில் முதல் நான்கு பாடல் களும் எனது என்னும் புறப்பற்று விடுதலை பற்றிக் கூறுகிறது. ஐந்தாம் குறட்பா அகப்பற்று விடுதலை பற்றி கூறுகிறது. இவ்விருவகைப் பற்றினையும் விட்டவர்களுக்கே விடு - பேரின்பம் - உண்டென்று குறிக்கின்றது ஆறாம் குறட்பா. இவைகளை விடாதவர்களுக்கு வீடு இல்லை என்று