பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 குறட்பா வீடு என்பது முத்தியென்று கூறப்படும் நிலைத்த பேரின்பம் என்பதனை விளக்குகின்றது. எல்லா விதமான ஐயப்பாடுகளையும நீக்கிய நிலை என்பதனையும் உணர்த்து கிறது. மூன்றாம் . நான்காம் பாடல்கள் மெய்யுணர்வு உடையவர்களுக்கே வீடடையும் பேறு உண்டென்று புலப் படுத்துகிறது. மெய்யுணர்வின் இலக்கணத்தினை ஐந்தாம் குறட்பா விளக்குகிறது. பேரின்ப வீட்டிற்குக் காரணமான அதாவது முதற் பொருளை உணர்தற்கு வழிகளான, கேள்வி, விமர்சனம், பாவனை என்பவைகளை ஆறு, ஏழு, எட்டு என்னும் மூன்று பாடல்களும் கூறும். இவைகளை விளக்கம் செய்தால் மிகவும் பெரிதாகும் ஆனபடியால் இவைகளை விளக்கம் செய்கின்ற மெய்ந்நூல்கள் பலவற்றுள்ளும் கண்டு தெளிக. மேலே கூறப்பட்ட மூன்று வழிகளினாலும் பரம்பொருளை உணரப் பிறப்பு அற்றுவிடும் என்றும், அவ்வாறு அற்றபிறகு, துன்பங்கள் எல்லாம் என்ன செய்யும் என்ற கேள்வியினை எழுப்பி, அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாரமாட்டாததால், வேறு சார்பு இன்றி அழியும் என்ற உண்மையினை ஒன்பதாம் பாடல் விளக்குகிறது. குற்றங்களைக் கெடுத்த ஞானிகள் இருவினைகளையும் செய்யாமையால் அவர்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை என்பதனைப் பத்தாம் பாடல் கூறுகின்றது. மெய் யுணர்தல்' என்ற இந்த அதிகாரத்தின் உட்பொருள் பெரிதும் அனுபவத்தாலேயே அறிந்துணர வேண்டியதாகும். நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவாவறுத்தல் என்ற அதிகாரங்களுடன், கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை, தவம் முதலிய அதிகாரங்களையும் சிந்தித்தறிதல் வேண்டும். முதற்குறட்பா, 'பொருள் சேர் புகழ் புகழ் புரிந்து ' என்று காணப்படும், கடவுள் வாழ்த்து ஐந்தாம் குறட்பா