பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 வினை நினைவுறுத்துவதாகும். இரண்டாம் குறட்பா தவம்’ என்ற அதிகாரத்தின் ஏழாம் குறட்பாவினை விளக்கம் செய்வதாகும். இவ்வாறே பற்பல குறட்பாக்களும் ஒன்றினையொன்று தொடர்பு கொண்டிருப்பனவாகும். 37. அவா அறுத்தல் முன்னும் பின்னும் வினைத் தொடர்பினை மெய்யுணர் வினால் துறவிகள் அறுத்து விடுவார்கள். இருந்தாலும் , உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றதால் பழைய பயிற்சியால் புலன்கள் மீது மீண்டும் நினைவு செல்லுதல் கூடும். அப்படிச் செல்லுதல் அஞ்ஞானத்திற்கும் பிறவிக்கும் காரணமாகும். ஆதலால் அதனையும் இடை விடாத மெய்யுணர்வால் அறுத்தல் வேண்டும் என்பதனை 'அவா அறுத்தல்' என்ற இவ்வதிகாரம் கூறும். அறுத்தல்" என்று முடிகின்ற அதிகாரம் இது வொன்றேயாகும். பிறப்பிற்குக் காரணமான விதையாக இருப்பது அவா." தான் என்பதனை முதற் குறட்பா கூறுகின்றது. மூன்று, நான்கு பாடல்கள், வேண்டாமை என்பதன் சிறப்பினைக் கூறி அதுவே விழுச் செல்வம் என்றும், பிறவாமைக்கு வழி யென்றும் கூறுகின்றன. ‘'வேண்டுதல் வேண்டாமை இலான்"-"ஒழுக்கத்து நீத்தார்"-"துறந்தார் பெருமை' என்பனபோன்ற குறட்பாக்கள் சிந்தனைக்குரியன. நான்காம் குறட்பா, அவா அறுத்தல் என்பது வீட்டின் பத்திற்கு பரம்பரையான் அன்றி நேரே காரணம் என்றும் அதுவரும்வழி இதுவென்றும் கூறுகின்றது. வாய்மை" என்ற அதிகாரம் சிந்திக்க வேண்டியதாயிற்று. ஐந்தாம் குறட்பா, அவா அறுத்தவரது சிறப்பினை விதி முகத்தானும், எதிர் மறைமுகத்தானும் கூறுகின்றது. அவாவினால் வரும் குற்றமும் அதனைக் காப்பதே அறம் என்றும் ஆறாம்