பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 முதலிரண்டு பாடல்களில் பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக் கொள்ளுதல் வேண்டும் என்பதும், கொள்ளும் வழியும் கூறப்பட்டன. மூன்று, நான்கு, ஐந்து பாடல்கள் பெரியாரைத் துணைக்கொள்ளுதலின் சிறப் பினைக் கூறுகின்றன. பெரியார்களைத் துணைக்கொள்ளு வதால் வரும் பயனை ஆறு, ஏழு பாடல்கள் கூறும். கடைசி மூன்று குறட்பாக்களும் பெரியாரைத் துணைக்கொள்ளாத வழி உண்டாகும் குற்றத்தினைக் குறிக்கின்றன. அறனறிந்து மூத்த அறிவுடையார், முற்காக்கும் பெற்றி யார், பெரியார், தம்மிற் பெரியார், ஆழ்வார், தக்கார், இடிக்கும் துணையார், இடிப்பார், மதலையாம் சார்பு, நல்லார்-என்று குறிக்கப்பட்டனவெல்லாம் அறிவு நிறைந்த பெரியார்களைப் பற்றிச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவுவனவாகும். தக்கார் இனம் இன்றியமையாதது என்பதனை ஆறாம் குறட்பா எடுத்துரைக்கின்றது. ஐந்தாம் கு ற ட் பா வு ம் எட்டாம் குறட்பாவும் மன்னனைச் சுட்டிக்காட்டி விளக்கம் தருகின்றன. குறிப் பறிதல்' 'சுற்றம் தழால்’ என்ற அதிகாரங்களும் ஒப்பிட்டுப் பார்த்தற்குரியனவாகும். காமத்துப் பாலிலும், குறிப் பறிதல்' என்றவொரு அதிகாரம் உண்டு. 46. சிற்றினம் சேராமை சிறிய இனத்தாரைச் சார்ந்திருக்காமையாகும். சிறிய இனம் என்பது தீய குணமும் செயலும் கொண்டவர்கள் என்பதாகும். சிறிய இனம் அறிவைத் திரித்து இருமை யினையும் கெடுக்கும். சிற்றினத்திற்கு மிகவும் அஞ்சுதல் வேண்டும். . . சிறிய இனம் பெரியோர்களுக்கு ஆகாது என்பதனை முதற் குறட்பா கூறுகிறது. இரண்டாம் குறட்பா நீர்,