பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நிலைபெறச் செய்தல் - என்ற கருத்தினைக் காட்டி ஆழ்ந்த பொருளினை மெய்ப்பிக்கின்றது. எண்ணித் துணிக’ என்று தொடங்கப்பெறும் ஏழாம் குறட்பா அரியதொன்றே யாகும். சூழ்ந்து செயல் . எண்ணிச் செய்வார் . ஊக்கார் அறி வுடையார் . தொடங்கார் . சூழாது எழுதல் - துணிக எள்ளாத - என்று கூறப்பட்டனவெல்லாம் வினைசெய்வதற் கான வழிமுறைகளைக் குறிப்பால் உணர்த்துவனவாகும். 48. வலி அறிதல் வினை மேற்செல்லும் அரசன் நால்வகை வலிமையினை யும் அளந்தறிந்து தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அரசனுக்கென்று சிறப்புற அமைக்கப்பட்டாலும், உலக வாழ்க்கையில் இருக்கும் பலருக்கும் உரிய உண்மைகள் கூறப்பட்டுள்ளனவாகும். வலி' என்றது வலிமை, வன்மை என்பதை குறிப்பதாகும். ஒப்புரவு அறிதல், காலம் அறிதல். இடன் அறிதல், குறிப்பு அறிதல் (பொருட்பால்) குறிப்பு அறிதல், (காமத்துபால்) என்ற அதிகாரங்களும் அறிதல்" என்று முடிகின்றன. குறிப்பு அறிவுறுத்தல்' என்றொரு அதிகாரமும் காமத்துப் பாலில் உண்டு. . முதலிரண்டு குறட்பாக்கள் வலிமையின் வகைகளையும் அதனை அறிந்து மேற்செல்வார் அடையும் பயனையும் கூறுகின்றன. மூன்றாம் நான்காம் குறட்பாக்கள், தன்னு டைய வலிமையினை அறிந்து கொள்ளாமல் வினை மேற் செல்வதனால் உண்டாகும் குற்றத்தினை கூறுகின்றன. மாற்றான் வலிமையினையும் அவனுடைய துணையின் வலிமையினையும் அறியாதிருந்தால் உண்டாகும் குற்றத் தினை ஐந்தாம் குறட்பா தெளிவுபடுத்துகிறது. ஆறாம் குறட்பா மேற்கொண்ட வினையின் வலிமையினை அறியா