பக்கம்:திருக்குறள் உரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவரிடம் பெருஞ்செல்வம் சேர்தலும் அச்செல்வம் இல்லாமற் போதலும் பயன் கருதியே என்று கூற முடியாது. 332. 333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். செல்வம் நிலையில்லாத தன்மையுடையது. ஆதலால் அத்தகைய நிலையில்லாத செல்வத்தை ஒருவன் பெற்றால் நிலையான அறங்களை அப்பொழுதே செய்யவேண்டும். நிலையில்லாதனவற்றைக் கொண்டு நிலையானவற்றைத் தேடிக் கொள்ளுதல் அறிவாண்மை என்பது கருத்து. செல்வத்தை எளிதில் அடைய இயலாது என்பது தோன்ற "அதுபெற்றால்’ என்றார். 333. 334. நாளென ஒன்றுபோல் காட்டி உயிரஈரும் வாளது உணர்வார்ப் பெறின். ஒரு மரத்தை நூல் அளவாக அறுத்து அழிக்கும் வாளைப் போலக் காலம், ஒரு நாள் போல் சிறு அளவாகஅளந்து காட்டி வாழ்நாளை அறுத்து அழிக்கும் என்பதை அறிஞர் அறிந்து வாழ்வர். இன்று-நாளை- என்று ஒவ்வொரு நாளாக வாழ்நாள் முழுவதும் கழிந்து அழிகிறது என்று உணராமலே அழிதலால் நாள் என ஒன்று போல் காட்டி' என்றார். நாள் சிலவாக, செல்லுமாறு உணர்த்தாமல் செலுத்துதலால் நாள்கள் பயன்கொள்ளப்படாமல் வறிதே கழிகின்றன. அதுமட்டுமன்றி 'இன்று பொழுதுபோயிற்று' என்று அருமைப்பாடு தெரியாமல் வாழ்நாளைக் கழிக்கிறார்கள் என்ற இழிவு தோன்றக் கூறியதாயிற்று. ஒவ்வொரு நாளையும் பயனுடையதாக ஆக்க வேண்டும் என்பது இக்குறளின் திரண்ட கருத்து. 334. 335. நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். பேசமுடியால் நாவையடக்கி விக்கல்மேல் எழுதற்கு முன் நல்லறச் செயல்களைச் செய்தல் வேண்டும். இவ்வுலக வாழ்க்கை நீங்குதற்குரிய அடையாளம்; நாச்செற்று விக்குள் மேல் எழுதல். அந்நிலை வரும்பொழுது அறம் சொல்லுதலும் இயலாது; அறம் செய்தலும் இயலாது. அதனால் முதுமையும் மரணமும் வருவதற்கு முன்பே அறச் செயல்களைச் செய்க என்று கூறியது. 335 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 97