பக்கம்:திருக்குறள் உரை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் முயற்சியில் களைத்துப் போகாமல் தொடர்ந்து ஈடுபடுவதற்கேயாம். அன்றாட வாழ்க்கையில் களைப்பை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருவது போல் வாழ்க்கையில் முதுமைத் துன்பம் நீங்கி மழலை மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு தடவையும் தொடக்க நிலையிலேயே முயற்சி அடையாமலிருக்கும் வகையில் கல்வி, அறிவு, உணர்வு முதலியன தொடர்ந்து உயிரைப் பற்றி வருகின்றன என்றும் ஆசிரியர் கூறுவார். 339 340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. இவ்விடம்பில் “ ஒண்டுக்குடி' இருந்தே வரும் உயிர்க்கு நிலையாகக் குடியிருக்கும் ஓர் இல்லம் இதுவரையிலும் அமையவில்லை போலும். உயிர் உடம்பை விட்டு நீங்குதலால் "ஒண்டுக்குடித்தனம்' என்றார். பிறப்பு இறப்பில் சுழலாமல் உயிர் நிறை நலம் பெற்று இன்ப அன்பினில் (இறைவன் திருவடிக்கீழ்) தங்குதலே உயிர்நிரந்தரமாகத் தங்கக்கூடிய இல்லம் அதனாலேயே அதற்கு “விடு' என்று பெயர் வந்தது. 340, 35.துறவு இந்த உலக வாழ்வியலில் காண்பனவும் கேட்பனவும் நுகர்வனவும் நிலையற்றவைகளாக இருக்கும் இயல்பினை அறிந்து, இவற்றிடத்தினில் உள்ள பற்றைத் துறத்தல், துறவு ஆகும். இத்துறவின் ஆக்கம் நான்', 'எனது' என்ற அகநிலைப் பற்றினையும் புறநிலைப் பற்றினையும் துறத்தல். இத்துறவு நெறி, மனம் துய்த்தலின் வழி ஏற்படுவது. " அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும் மாமியும்நீ ஒப்புடை மாதரும் ஒண்பொருளும்நீ ஒருகுலமும் சுற்றமும் ஒருரும்நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய்நீ இப்பொன்நீ இம்மணிநீ இம்முத்துநீ இறைவன்நீ ஏறுர்ந்த செல்வன்நீயே.” இத்திருப்பாடலில் 'துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய்'என்ற சொற்றொடர் அறிக. தொல்காப்பியமும், “காமஞ்சான்ற கடைக்கோட் காலை ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 99