பக்கம்:திருக்குறள் உரை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 472, ஒல்வது அறிந்து அறிந்ததன்கண் தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். தன்னால் செய்யக் கூடிய செயலையும், அந்தச் செயலை நிறைவேற்றி முடிப்பதற்குரிய வலிமையையும் அறிந்து, அந்தச் செயலைக் கருத்தில் வைத்துச் செயல்படுவோர்க்கு இயலாததென்று ஒன்றும் இல்லை. தம் ஆற்றலுக்கு இசைந்த ஒரு செயலை மேற்கொண்டு அச்செயலிலேயே கருத்துன்றி முயற்சி செய்வார்க்கு இயலாத ஒன்றில்லை. “செல்லாதது இல்' - வெற்றி உறுதி என்பது கருத்து. 472. 473. உடைத்தம்வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். தம்முடைய வலியைச் சரியாக அளந்தறியாது தம்முடைய எழுச்சியின் காரணமாக மட்டுமே செயல்களைத் தொடங்கிச்செயலைச் செய்து முடிக்காது இடையில் செயலைச் செய்யமாட்டாது நின்று தோற்றுப் போனவர் பலர். அரசியல் ஆதலால் பகைமேற் செல்லல் என்று கொள்க. 'முரிந்தார் பலர்' என்றதால் வெற்றி பெற்றார் சிலரே என்பது பெறப்பட்டது. இதனால் வெற்றிகரமாக வாழ்க்கையை முடிக்கும் அறிவுடையார் சிலரே எண்பது கருத்து. 473. 474. அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். மற்றவர்களுடன் பொருந்தி அந்த நட்பமைதிக்கு ஏற்ப நடந்து கொள்ளாமலும், தண் வாழ்க்கையின் தகுதிகளை அளந்தறியாமலும் தன்னைத்தானே உயர்வாக மதித்துக் கொண்டும் நடப்பவர்கள் விரைவில் கெடுவர். நட்பமைந்தவாறு ஒழுகுதல் தன் தகுதியறிந்து அதற்கு ஏற்ப வாழ்தல் எப்போதும் யாரிடத்தும் தன்னைத்தானே உயர்வாக மதித்துக் கொண்டு கூறாமலும் நடவாமலும் இருப்பது வெற்றிக்குத் துணை செய்யும். 474. 475. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். வைக்கோலினும் நொய்ய மயில் தோகையேயானாலும் வண்டியின் தாங்கும் அளவைக் கடந்து மிகுதியாக ஏற்றின் அவ்வண்டியின் அச்சு முறியும். நட்புடையார் பலர் கூடிச் செய்யின் வெற்றி பெறுவர். அதுபோலவே தம்முடைய பகைவர் பலராகக் கூடிட அனுமதித்துவிடின் தோல்வியுறுதி. 144 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை