பக்கம்:திருக்குறள் உரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் ஒருவன் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும், உலகம் முழுவதையும் கைப்பற்றுதற்குரிய செயலை அவன் தகுந்த காலமறிந்து இடத்தாற் பொருந்திச் செய்வானாயின், இத்திருக்குறள் காலமும் இடமும் அறிந்து செய்யப் பெறின் எந்தச் செயலும் அரிதன்று, எளிதே என்று கூறுவதாயிற்று. 484, 485. காலம் கருதி இருப்பர் கலங்காது. ஞாலம் கருது பவர். உலகம் முழுவதையும் பெறக் கருதுபவர் மனக்கலக்கமின்றித் தமது எண்ணம் நிறைவேற்றுவதற்குரிய செயல் செய்வதற்கேற்ற காலத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர். - கலங்குதலாவது; தாம் கருதியது கைகூடுவதற்குக் காலம் தாழ்த்துதல்; காலம் தாழ்ப்பது குறித்துக் கவலையுறுதல். 'காலம் கருதி யிருப்பர்'என்பதற்குரிய செயற்பாட்டுக்குரிய காலம் என்று பொருள் கொள்ளவேண்டுமேயன்றி சோதிட அடிப்படையில் தன்னம்பிக்கைக்கு எதிரான"நல்லகாலம்’ என்று பொருள் கொள்ளுதல் பிழை. இங்கு காலமறிதல் என்பது கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் புலனாகும் காலச் சூழ்நிலைதான். 485. 486. ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. வலி மிகுந்த ஒருவர் ஒடுங்கியிருக்கும் இருப்பு, சண்டை போடும் செம்மறிக் கடா தன் பகையை வலிமையோடு தாக்குவதற்குப் பின் வாங்குவதைப் போன்றது. ஊக்கமுடையார் சில பொழுது வாளா இருத்தல் சோம்பலின் பாற்பட்டதன்று. அதுபோலவே ஊக்கமுடையார் செயல்களில் பின்வாங்குதல் தோல்வியெனக் கொள்ளப்பாற்றன்று. “ஒரடி பின்னே இரண்டடி முன்னே' என்றார் மாமேதை லெனின். 486. 487. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். தெளிந்த அறிவுடையவர், தமக்கு இன்னாதன கண்டபொழுது பலரறியப் புறத்தே வேர்த்துக் காட்சி தரமாட்டார். இன்னாதன கண்டு உள்வேர்த்து அந்த இன்னாதனவற்றை மாற்றுதற்குரிய காலம் பார்த்திருப்பர். 'பொள் என”என்றது சினம் கொண்டுவேர்த்தலின் வினைக்குறிக்க வெளிப்படையார் சினத்தைக் காட்டுதல் வெற்றிபொருந்திய வாழ்க்கைக்குத் i48 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை