பக்கம்:திருக்குறள் உரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 50. தேரான்_தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். ஒருவனை ஆராயாது தெளிதலும் ஆராய்ந்து தெளிந்த பின்பு அவனைப் பற்றி ஐயுறுதலும் ஆகிய இவ்விரண்டும் ஒருவனுக்கு ஒழியாத துன்பத்தைத் தரும். ஒருவனைத் தெளிந்து வினையில் வைத்தபிறகு ஐயுறுதல் மிகுந்த துண்பத்தைத் தரும். செட்டிநாட்டரசர் குடும்பத்தில் யாரையும் ஆராயாது பணிக்கு அமர்த்துதல் இல்லை.அமர்த்தப்பட்டோர் யாரையும் நீக்குவதுமில்லை. 510. 52. தெரிந்து வினையாடல் ஒருவர் தான் மேற்கொள்ளும் செயல்களில் துைைணநிற்பாரைத் தேர்ந்து தெளிந்து துணையாகக் கொண்ட பிறகு அவரவர் தகுதி திறனுக்கேற்ற பணிகளை ஒதுக்கிச் செய்யச் செய்தும் அவர்கள் பணிகளில் ஈடுபட்டுச் செய்யும்பொழுது நேரிடையாகவோ மறைமுகமாகவோ கண்காணித்து முறையாகப் பணியில் ஈடுபடுத்துதலும் பணிகளின் பயன்களைத் தப்பாமல் அடையும் முயற்சியில் ஈடுபட்டுச் செய்தலுமாம். ஒருவர் தாம் மேற்கொள்ளும் செயல்களின் நன்மை தீமைகளைத் தீர ஆராய்ந்து செயற்படுதல் என்று கூறினாலும் தவறில்லை. 511. நன்மையும் தீமையும் நாடிநலம் புரிந்த தன்மையால் ஆளப் படும். நாடாள்பவர் தமக்குக் கொடுத்த பணிகளின் நன்மையும் தீமையும் ஆராய்ந்து பார்த்து, நாடாள்பவர்க்குத் தீமை தருவனவற்றை விலக்கி விட்டு நாடாள்பவர்க்கு நன்மை தருவனவற்றையே செய்யும் தன்மையிடையவனாயிருத்தலை ஆராய்ந்து சிறந்த தொழிலிலே அமைத்திடுவர் நாடாள்வோர். ஒரு பணியாளர் செய்த பணிநலத்தின் அடிப்படையிலேயே புதிய பொறுப்புக்களில் அமர்த்தப் பெறுவர். நாடாள்வோரின் இச்சைக்குரின செய்தல், சொன்னதைச் செய்தல் பயனுடையன செய்தல் ஆகா என்பது கருத்து. 511. 512. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 155