பக்கம்:திருக்குறள் உரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் நாடாள்வோருக்கு வினை செய்வோர், நாடாள்வோருக்குப் பொருள் பெருகவரும் வழியைப் பண்ணியும், பொருள் பெருகி வந்தபொழுது மேலும் பெருக்கி வளர்த்தும், செல்வப் பெருக்கப் பணிகளைச் செய்யுமிடத்தும் வரக்கூடிய இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து முயற்சி கெட்டுப் போகாமல் செய்க. பொருள் செய்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளைநாள்தோறும் ஆராய்ந்து செய்யாவிடில் கெடும் என்று கூறியது. 512. 513. அன்புஅறிவு தேற்றம்அறிவு அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. நாடாள்வோரின் தெளிவு, தம்மிடத்தில் அன்பும் தமக்குரியன செய்யும் அறிவும், செயற்பாட்டில் கலங்காத தெளிவும் பொருள் சேர்ந்துழி அதில் தானும் அடைய வேண்டும் என்ற அவாவின்மையும் ஆகிய நான்கு இயல்புமுடையவர்களிடம் செயலை ஒப்படைப்பதில் இருக்கிறது. வினை செய்வோருக்கு அவா வந்தால் பொருளிழப்புடன் ஒழுக்கக்கேடும் கொலை முதலியனவும் உருவாகும். 513. 54. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறுஆகும் மாந்தர் பலர். எல்லாவகையாலும் தேர்ந்து தெளிந்து தொழிலில் அமர்த்திய பின்னும் செயற்படும் தொழிலியல்பால் மனவேறுபாடு அடையும் மாந்தர் LGUITT6).JIT. தொழிலியல்பால் மனம் வேறுபடுதலாவது; பெருகிய லாபம் வருவதைத் தனதாக்கிக் கொள்ளும் முயற்சி, சிறப்பால் வரும் தகுதிகளுக்கு உரியராகும் வேட்கை கண்காணித்தல் முதலியவற்றால் மனச்சங்கடமுற்றுப் பகை கொண்டு ஒழுகுதல் முதலியன. “வினை வகையான் வேறாகும் மாந்தர் பலர்' என்றதால் சிலர் தான் உண்மையும் உறுதியும் உடையோராகக் கிடைப்பர் என்பது கருத்து. இந்தச் சிலரைப் பெற, பலரை ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. 514. 515. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற் றன்று. நாடாள்வோர் தமக்குரிய செயல்களைத் திறம்படச் செய்யும் உபாயங்களை அறிந்து செய்ய வல்லானையும் செயல் நிலையில் தோன்றும் இடையூறுகளையும், வரும் துன்பங்களையும் பொறுத்துச் செயலைச் செய்து 156 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை