பக்கம்:திருக்குறள் உரை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் பொறிகளுக்கு வாயிலாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை முறைப்படுத்துதல் - பக்குவப்படுத்துதல் நெடிய நாள் வாழ்வைத் தரும். சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் இவற்றின் வகையறிந்து பக்குவப்படுத்துவதின் மூலம் மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்கும். அவித்தல்: பயன் கொளத் தக்கவாறு பக்குவப்படுத்துதல். 6. 7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. தனக்கு உவமையில்லாத இறைவனின் திருவடிகளைச் சேராதவர்கள் மனக்கவலைகளை மாற்றிக்கொள்வது அரிது. உவமை கூறற்கியலாத உயர்வுடையானைச் சார்தல் வழி உயர்ந்த நலன்களைப் பெறுவதால் மனக்கவலை நீங்குகிறது. 7. 8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது. அறக்கடல் வடிவினனும் செந்தண்மை பூண்டவனுமாகிய இறைவனுடைய தாள் சேர்ந்தவர்களே அல்லாமல், மற்றவர்கள் பொருள், இன்பக் கடல்களை நீந்துதல் அரிது. அறமும் செந்தண்மையும் கொண்டொழுகியவர்களிடம் தான் பொருளும், இன்பமும் வந்து பொருந்தும். அப்படிவந்து பொருந்திய பொருளும் இன்பமும் கவலை தரா. வாழ்க்கைக்குப் புணைபோலப் பயன்படும்.8. 9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. எட்டுக் குணங்களையுடைய இறைவன் தாள்களை வணங்காத தலை பயனற்றது. குறிக்கோளும் குணமும் இல்லாத பொறிகள் பயனற்றவை. எண் குணம் - தன் வயம்; தூய்மை, இயற்கையறிவு, முற்றறிவு, கட்டின்மை, பேரருள். எல்லையிலாற்றல்-வரம்பில் இன்பம். 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவன் அடிசேரா தர், தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 13