பக்கம்:திருக்குறள் உரை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஊக்கமுடையோர் ஒன்றினைக் குறிக்கோளாக ஏற்பின் 597. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின் பட்டுப் பாடு ஊன்றுங் களிறு. களிறு இரும்புத்தளையால் கட்டப்பெற்றாலும் தன் முயற்சியில் குன்றாது. அதுபோலவே ஊக்கம் உடையோர் தம் பெருமைக்குச் சிதைவு ஏற்பட்டாலும் தளராது முயன்று தன் பெருமையை நிலைநாட்டுவர். ஊக்கமுடையோரின் முயற்சியை இடர்ப்பாடுகள் நிறுத்தா பின் வாங்கச் செய்யா என்பது கருத்து. 597. 598. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு. ஊக்கமில்லாதவர்கள், உலகத்தில் எப்பொழுதும் வண்மையுடையேம் என்ற பொருமையை அடைய இயலாது. மற்றவர்களுக்கு வழங்கும் வள்ளண்மை , தடையின்றித் தொடர்ந்து நீடிக்க வேண்டுமாயின் பொருளீட்டத்திற்குரிய ஊக்கம் இன்றியமையாதது என்று உணர்த்தியது. 599. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். யானை பெரிய உடலை உடையது; கூரிய கொம்புகளை உடையது. ஆயினும் ஊக்கமில்லாமையின் காரணமாகச் சிறிய புலிக்கும் அஞ்சி நிற்கும். கருவிகளால் அமைவதன்று ஆளுமை. ஊக்கத்தினாலேயே அமையும் என்பது கருத்து. 599. 600. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃ து இல்லார் மரம்மக்கள் ஆதலே வேறு. ஒருவருடைய உண்மையான செல்வம் ஊக்கமே. ஊக்கமில்லாதார் மக்களேயல்லர் மரங்களை அனையர். ஊக்கமில்லாதாரை மரம் என்று இழித்தல் அறிவியலுக்கு உடன்பாடுடையதல்ல. மரம் சூழ்நிலைகளுக்குத் தாக்குப்பிடித்து நின்று வளர்ந்து பயன் தருவது அறிக. 600. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 181