பக்கம்:திருக்குறள் உரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 61. மடியின்மை மடியின்மை - சோம்பலின்மை. ஊக்கமுடையோர் ೯ಾಗ್ದಿ தாம் கருதியன முடியாமையினாலோ, காலந்தாழ்த்தலினாலோ உளளம சேர்வார். அவ்வழி சோம்பல் தோன்றும். இவ்வழி சோம்பலுடையார் எண்ணிக்கை மிகுதி. பிறிதொருவகையினர் ஊழ், நாள், கோள், நம்பிக்கை ഖഴ്സി சோம்பலுடையராவர், இவ்வகையினர் இன்றைய சமுதாயத்தில் பெரும் பகுதியினர்.இவ்விரண்டிலும் சேராது இயற்கையாகவே ஊக்கம் எள்ளளவுமின்றிச் சோம்பித் திரிவோர் உண்டு. இவர்கள் மக்கட் சமுதாயத்திற்குச் சுமை போல்வர். மடி - மடமையின் அடிப்படையில் பிறந்த சொல்லாக இருக்கலாமா? ஆய்வு செய்தல் நன்று. அதாவது உயிர் வாழ்க்கை உயிர்ப்புள்ளது, இயக்க வழிப்பட்டது, குறிக்கோளுடையது என்று அறிய வேண்டும். உயிர்ப்புடன் இயங்கிஇயக்கிவாழ்தலே வாழ்க்கையென்று அறிந்து வாழாமல் சோம்பித்திரிதல் அறியாமை அல்லவா? 601. குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும் மாசுஊர மாய்ந்து கெடும். தான் பிறந்த குடியாகிய நந்தாவிளக்கு ஒருவனுடைய சோம்பலாகிய இருள் வந்து மூடக் கெட்டுப் போகும். குடியைக் குன்றா விளக்கென்றது வழித்தோன்றல்கள் வழி, குடிவளர்ந்து விளக்கமாக நிலை பெறுதலின். சோம்பலை மாசு என்றது, மாசு பல தீமைகளுக்குப் பிறப்பிடமாதல் போல் சோம்பலும் பல தீமைகளுக்குப் பிறப்பிடமாதலின். "குன்றா விளக்கம்” என்ற வாய்ப்பாட்டிற்கு நந்தா விளக்கு என்ற பொருளை விடக் குறையாத விளக்கம் என்று பொருள் கொள்ளுதல் நல்லது. 601. 602. மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். 182 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை