பக்கம்:திருக்குறள் உரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவர் தாம் எண்ணியவற்றையெல்லாம் எண்ணியவாறே அடைவர், எண்ணியவர் உறுதியுடன் கடைப்பிடியுடையராக இருப்பின். 'திண்மை - முயற்சியின் பாற்பட்டது. திண்மையிலாதார் எண்ணுவதிலும் கூட ஒரு தன்மைத்தாக எண்ணார் என்பது உம் அறிக. 666. 667. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. உருவத்தின் சிறுமை கண்டு இகழ்தலைத் தவிர்த்திடுக. உருண்டு ஒடும் தேருக்கு அதன் சிறிய அச்சாணிஓட்டத்திற்குத் துணை. அதுபோல்வாரை உடையது உலகம். அச்சாணி, தேரின் சக்கரம் கழன்று விடாமல் பாதுகாப்பதுடன் தேர்ச் சக்கரத்தின் உருளலுக்கும் துணை செய்கிறது. தேரின் அச்சாணி உருவத்தில் சிறியதாயினும் திண்மையுடையது. 667. 668. கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல். தெளிந்த அறிவினால் தேர்ந்தெடுத்த பணியினைச் செய்யும் பொழுது மனம் சலியாதும் காலம் நீட்டிக்காமலும் உடனே செய்யவேண்டும். பணியிடையில் எதிர்ப்புகள், தோல்விகள், இழப்புகள் வரக்கூடும். இவற்றால் மனம் சலித்தல் கூடாது. எதிர்ப்புகள், தோல்விகள், இழப்புகள் பணியினால் வருபவையல்ல. பணிகளைச் செய்வோரின் அணுகுமுறையால் வருபவையேயாம். ஒரு பணிக்குரிய காலம் தொடர்ந்து இருத்தல் இயலாது, காலம் மாறுபடலாம். பணியின் தன்மையும் பயனும் மாறுபடலாம். ஆதலால் காலம் நீட்டித்தல் கூடாது. 668. 669. துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. துன்பமே வந்து உறுத்தினாலும் துணிவுடன் இன்பம் தரும் செயல்களைச் செய்க. 'இன்பம் பயக்கும் எனின்” என்றும் பாடம் உண்டு. முன்பே ' எண்ணித் துணிக' என்று கூறியுள்ளதால் ஈண்டு எண்ணித் துணிந்த பணி இன்பம் பயக்கும் என்ற ஒருதலையான முடிவுக்குப் பிறகு தொடங்கிய பணியாக இருப்பதே முறையாதலின் “இன்பம் பயக்கும் வினை' என்ற பாடமே சரியானது. எந்த ஒரு பணியும் தொடக்கத்தில் துன்பம் தருதலே இயற்கை. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 203