பக்கம்:திருக்குறள் உரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 771. என்ஜமுன் நில்லன்மின் தெவ்விர் பலர்.என்.ஐ முன்நின்று கல்நின்ற வர். என்னுடைய தலைவனாகிய அரசன் முன்னே நிற்காதீர்! நின்றால், என் அரசன் முன் நின்று நடுகல் ஆனவர் நிலையினை அறிக. 'நடுகல் வீரர்கள் நினைவுச் சின்னம். 771. 772. கானமுயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. காட்டினுள் முயலினைக் குறிவைத்து எய்த அம்பைத் தாங்குவதை விட, யானையைக் குறிவைத்துத் தவறிய அம்பைத் தாங்குதல் இனிது. எல்லாரும் எளிதாக அடையக் கூடிய ஒன்றைக் குறிக்கோளாகக் கொள்ளுதலைவிட உயர்ந்த குறிக்கோளைக் கொள்ளவேண்டும் என்பதை மற்றவர் விரும்பவும் இயலாத யானையைக் குறிவைக்கும் என்பதனால் உணர்த்தியது. 772. 773. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்று.அதன் எஃகு. பகைவர்மேல் தொடுத்த போரைக் கண்ணோட்டமின்றிச் செய்தல் பேராண்மை. அதேபோழ்து அப்பகைவர்க்கு இடர்ப்பாடு வந்தக்கால் அப்பகைவருக்கும் உதவி செய்தல் ஊராண்மையாகும். இந்த ஊராண்மை’ எஃகு போல் வலிவுடையதாகும். பகைவர்க்கு உதவி செய்தல் அஞ்சியன்று என்பதனை உணர்த்த “ஊராண்மை யென்றும் எஃகு என்றும் கூறினார். 773. 774. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். தான் எறிந்த வேல் களிற்றினைக் குத்தி அவ்வேலைக் களிற்றோடு போக்கி வரும் வீரன் தன் உடம்பில் பாய்ந்துள்ள வேலைப் புண்சிரிப்புடன் பறிப்பான். தன் உடம்பில் பதிந்த வேல் தந்த துன்பம் அறியாது, பதிந்த அந்த வேலொடு போர் செய்துள்ளான் என்பதும் 'உயர்ந்த விரத்திற்குத் துன்பமும் சாவும் இல்லை' என்பதும் உணர்த்தியவாறு. 774. 775. விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின் ஒட்டன்றோ வண்க ணவர்க்கு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 233