பக்கம்:திருக்குறள் உரை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் பகைவன் வெகுண்டவுடன் பகைவன் மேல் வேலை எறியாமல் கண் இமைத்துப் பார்த்துப் பின் பகைவன்மேல் வேல் எறிதல் புறங்கொடுத்தலுக்கு நேர். பொதுவாக, இமைத்தல் அச்சத்தின் அடையாளம். ஆதலால் புறங்கொடுத்தலுக்குச் சமம் என்றார். துடிப்புள்ள விரத்திற்கு எடுத்துக்காட்டு. 775. 776. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. தனது வாழ்நாளில் விழுப்புண்படாது கழிந்த நாள்களைப் பயன்படாத (வாழாத)நாள்களாக வீரர்கள் எண்ணுவர். இந்த நூற்றாண்டுக்கு, சாதனை இல்லாத நாள்களும் பயன்படாத நாள்கள் போலவாம். வாழ்தல் - பயன்தரத்தக்கவாறு வாழ்தல் என்பதேயாம். 776, 777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் சுழல்யாப்புக் காரிகை நீர்த்து. இந்த மண்ணில் ஒருவரிடத்தில் நில்லாது சுழன்று கொண்டிருக்கும் தன்மையுள்ள புகழை விரும்பி, துறக்கத்திற்குரிய சாதனைகளைச் செய்யத் தவறும் வீரர்கள் கட்டிய விரக்கழல் அலங்கார ஆபரணத் தன்மைத்தேயாம். “சுழலும் இசை' என்பது இந்த மண்ணில் பெறும் புகழ் நிலையானதல்ல என்று உணர்த்தியது. 777. 78. உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும்கீர குன்றல் இலர். மரணத்திற்கு அஞ்சிப்போர்க்களத்திற்குச் செல்லத் தயங்காதவர்கள் மறவர்கள். அவர்கள் தம் தலைவன் வெகுண்டாலும் தம் இயல்பில் குறையமாடடாரகள. தலைவனுக்கு வெகுளிவருதலுக்குரிய வாயில்கள் பலப்பல. தலைவன் வெகுண்டான் எனக்கூறித் தம் நிலையில் திரிதல் மறவர்களுக்கு இயல்பன்று. 778. 79. இழைத்தது இகவரமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். எண்ணிச் சூளுரைத்ததைச் செய்து முடிக்காமல் இறந்துபடுவோரை யார்தான் ஒறுத்தல் செய்ய இயலும். 234 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை