பக்கம்:திருக்குறள் உரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் பகைவர் நட்பாகும் காலம் வந்தால், அவரோடுமுகநக நட்புச் செய்க அகங்கலந்த நட்புக் கொள்ளற்க. அகங்கலந்த நட்பு, நம்பிக்கையளிப்பது. அந்த நம்பிக்கை அழிவுக்குக் காரணமாகி விடக்கூடாது என்பதால் முகம் நட்டு அகம்நட்பு ஒரீஇ என்று கூறினார். 830. 84. பேதைமை பேதைமை - யாதும் அறியாமை என்று உரையாசிரியர் கூறியுள்ளார். யாதும் அறியாதார் எவரும் இல்லை என்பதால் அறிய வேண்டுவனவற்றை அறியாமல், அறிய வேண்டுவனவற்றை அறிந்து கொள்ளும் உணர்ச்சியில்லாமல் இருப்பது பேதைமை என்று கொள்ளல் சிறப்பு. அல்லது முறை பிறழ அறிவது பேதைமை என்றும் கொள்ளலாம். பேதைமை குற்றங்கள் யாவினும் பெரிய குற்றம். 831 பேதைமை என்பதுஒன்று யாதெனின் ஏதம்கொண்டு ஊழியம் போக விடல். - பேதைமை என்பது யாது? துன்பத்தைக் கொள்முதல் செய்து கொண்டு ஆக்கத்தைக் கைவிடல். ஆக்கம் - கேடு இவற்றின் தன்மையும் அருமையும் அறியாமை பேதைமையால் நிகழ்வது. 831. 832. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தண்கண் செயல். பேதைமை யெல்லாவற்றுள்ளும் பேதைமையாவது, தனக்கு ஆகாத ஒழுக்கத்தை விரும்புவது. பேதைமையுள் பேதைமை தனக்கில்லாதவற்றை விரும்புதல், செய்தல் என்றும் பொருள்கொள்ளலாம். மக்களாட்சி முறையில் ஆளவந்தோர் மக்களுக்காகவன்றித் தனக்காகத் தன் குடும்பத்துக்காக ஒன்றை விழைதல் பேதைமை. 832. 833. நாணாமை நாடாமை நார்இன்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். நாணவேண்டுவனவற்றிற்கு நாணமில்லாமல் இருத்தலும் நாடித் தேட வேண்டியவைகளை நாடாமல் இருத்தலும் யாரும் தன்னிடம் அன்பில்லாமல் போவதற்குரிய செயல்களுடைமையும் பேணிக் காக்க வேண்டியனவற்றைப் 248 தவத்திரு குன்றக்குடி அடிகளார் ഉ_ഞ്