பக்கம்:திருக்குறள் உரை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. ஒருவருக்குப்பெருந்தன்மையும் பெருமையும் அழியும் சூழல் வந்துற்ற போழ்தும் சாவாமல் உடலோம்பி வாழ்தல் சாவாமைக்கு மருந்தோ? ‘சாவாமைக்கு மருந்து பெருந்தகைமையுடன் வாழ்தலேயாம். “ஊனோம்பும் வாழ்க்கை” என்றது "உயிர் இல்லை” என்றுணர்த்த 968. 969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். கவரிமான் தன் உடலில் உள்ள ஒரு மயிர் நீங்கினாலும் வாழாது. அதுபோல அவமானம் வந்துழி உயிர்நீப்பர் சான்றோர். “மானம் உயிர்நிலை' என்று வாழும் நெறி. 969, 970. இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. அவமானம் வந்த பொழுது வாழ்தல் செய்யாது மரணத்தைத் தழுவுவோரின் புகழை உலகு தொழுது வாழ்த்தும். “மானத்துடன் வாழ்தலே புகழ்' என்றுணர்த்தியது. 970, 98. பெருமை மற்றவர்களால் தகுதி நலங்கருதிப் பாராட்டப் பெறுதல் பெருமை எனப்படும். மானத்துடன் வாழ்தலின் மூலம் அடையக் கூடியது பெருமை, 971 ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல். ஒருவனுக்குப் பெருமையாவது செயற்கரிய செயல் செய்யும் ஊக்கமுடையாண் என்று மதிக்கப்படுதல். ஒருவனுக்கு இழிவாவது செயலிழந்தும் வாழ்வோம் என்று எண்ணுதல். செயற்கரிய செய்கள் மூலம்தான் புவியை நடத்த இயலும். அதற்குரிய ஊக்கம் உடையவராய் இருத்தலும் அந்நிலையைப் பிறர் மதித்தலும் பெருமை. 'செயலற்ற நிலையில் வாழ்தல் இழிவு'. 971. 972 பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான். 280 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை