பக்கம்:திருக்குறள் உரை.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் வந்து பொருந்தும். வறுமையிண்வழி உடல் நோய் வசப்படுதல், ஊக்கமிழத்தல், மானமிழத்தல் முதலியன தொடரும். 1045, 1048. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். வறுமையுடையார்,நல்லறச்செய்திகளை நன்றாக உணர்ந்து கூறினும் அவர்தம் சொல் மதிப்புப் பெறாது பயனற்றுப் போகும். சொல்லப்படும் பொருளை நோக்காது. சொல்லுவாரை நோக்கும்நிலை உள்ளவரை இந்த அவலம் இருக்கும். 10:3. 1047. அறம்சாரா நல்குரவு ஈன்றதா யாயினும் பிறண்போல நோக்கப் படும். புண்ணியம் சேராத வறுமையுடையான் ஈன்ற தாயாலும் அந்நியன் போலப் பார்க்கப்படுவான். அறஞ்செய்தலுக்குரிய வாயில்கள் வறுமையால் அடைபட்டுப் போதலின், 'அறஞ் சாரா நல்குரவு' என்றார். வறுமையுடையோனால் பயனில்லாமையாலும் அதுமட்டுமன்றி உதவி செய்ய வேண்டிய கடப்பாடு வரும் என்ற அச்சத்தாலும், பிறன்போல நோக்கப் படும்' என்றார். 4.047. 1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. நேற்று வருத்திய வறுமை இன்றும் வந்து வருத்துமோ? வந்தால் என்ன செய்வது? இன்றும் வருவது கொல்லோ' என்றதால் இன்றும் வறுமை வருத்தும்படிவாழ்வது அறிவற்ற செயல் என்பதுணர்க.நேற்றைய பாடு இன்றைய அறிவு அல்லவா? 1048. 1049. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாது.ஒன்றும் கண்பாடு அரிது. நெருப்பிற்குள் கிடந்தும் உறங்கலாம். ஆனால் வறுமையிண்கண் உறங்குவது அரிது. 杀 * . ● 餐 நெருப்புடனும் கூடி வாழலாம். ஆனால் வறுமையுடன் கூடி வாழ்தல் இயலாது என்றுவறுமையின் கொடுமை உணர்த்தியவாறு. 1049. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 299