பக்கம்:திருக்குறள் உரை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். எத்தகையோரிடத்தும் சினம் கொள்ளுதலைக் கருதவும் செய்யற்க. அதனால் பலவகையான தீமைகள் உண்டாகும். வெகுளி தீமைகளின் பிறப்பிடம் என்றவாறு, சினம் காட்டப்பட்டோர் எளியோராயினும் மறைவாகவாவது தீமை செய்ய வன்மம் கொள்வர்.ஆதலால் "யார்மாட்டும் ' என்றார், - 303. 304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. முகத்தின் மலர்ச்சியையும், அகத்தின் மலர்ச்சியையும் கெடுத்தெழுகின்ற சினத்தைத் தவிர வேறு பகைகளும் உண்டோ? இல்லை. சினத்தின் விளைவு பகை, பகை வந்திடின் இம்மையும் மறுமையும் துன்பமே விளையும். 304. 305. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். ஒருவண் தனக்குத் துன்பம் வராமல் காத்துக் கொள்ள விரும்புவானாயின் சினம் வராமல் காத்துக் கொள்வானாக . அங்ங்ணம் சினம் வராமல் காத்துக் கொள்ளானாயின் அச்சினமே கொல்லுதல் நிகர்த்த கொடிய துன்பங்களைத் தரும். 305. 306. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். சினம் என்னும் நெருப்பு, தம்மைச் சேர்ந்தாரையும் தம்மைத் துன்பக் காலத்தில் தப்புவித்து பாதுகாத்தவரையுமே சுடும். - சினம் நெருப்பாகும். ஒரோவழி புறநிலையில் காட்டப்படுவது மட்டுமின்றி, அகநிலையில் எரிந்து கொண்டிருக்கும். ஆதலால் சினம் நெருப்பாயிற்று. சினத்தால் தாம் கெடும் போது பாதுகாக்கக்கூடிய இனத்தாரையும் கட்டுவிடுவதால் பாதுகாப்பே இல்லாத நிலையில் தனிமைப்படுத்தப்படுகிறார் என்பதாயிற்று. 306. 307. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 88 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை