பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 திருக்குறள் கதைகள் - போஸ்ட் மாஸ்டர் அப்படிச் சொல்லக்கூடாது. என் பேரன் ரொம்ப நல்ல பையன். கட்டாயம் மணியார்டர் அனுப்புவான் !' - அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறுவார் சீதாராமய்யா.

ஐயா, பேஷாய் அனுப்பட்டும். நாளு அதுக்கு குறுக்கே நிற்கப் போகிறேன் ?' என்பார் போஸ்ட் மாஸ்டர்.
  • நாராயணு தாராயணு ' என்று ஈனசுரத்தில் சொல் விக்கொண்டே சீதாராமையா அந்த இடத்தை விட்டு நகர்வார். -

பஐரே கோபாலம் -இந்தக் குரல் தெருக்கோடி வரை ஒலித்துவிட்டுப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மறையும். எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா?-சீதா தய்யா தினம் தினம் ஆவலோடு, நம்பிக்கையோடு கட்கும் கேள்வி இது. r EG இல்லையே!” - போஸ்ட் மாஸ்டர் வராகாச்சாரி ஒவ்வொரு நாளும் அலுக்காமல் சலிக்காமல் கூறும் பதில் இது. மூன்று வருட காலமாக நாள் தவருமல் சீதாராமய்யா இதே கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண் டிருக்கிருர். போஸ்ட் மாஸ்டர் அதே பதிலேத் திரும்பத் திரும்பச் சலிக்காமல் சொல்லிக் கொண்டிருக்கிரு.ர். * .

  • ஐயோ பாவம் : இப்படி ஒரு அப்பாவி ஆத்மா இந்த உலகத்தில் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறதே!’ -இதை எண்ணும்போது வராகாச்சாரிக்குத் தம்மை அறியாமல் சிரிப்பு வரும். - - வராகாச்சாரி தாலுகாபீசில் ஹெட் கிளார்க்காயிருந்து ரிடயரானவர். பெரிய வாயாடி. இந்த உலகமே அவருக்கு அல்ட்சியம். யாரையும் எடுத்துப் போட்டது போல் தான் பேசுவார். - -