பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 திருக்குறள் கதைகள் வாங்கிக்கொண்டு வரேன். அதுவும் அன்ருடம் நமக்கு வேண்டிய அளவுக்குத்தான் வாங்கறேன். நாளைக்கும் சேர்த்து வ்ாங்கற பழக்கம் கிடையாது. ஆண்டவன் என் தலையிலே இப்படித்தான் எழுதியிருக்கார் ' என்று கண்ணிர் உகுத்தார் கிழவர். . ரங்குடுவின் இளம் உள்ளம் வேதனைப்பட்டது. தாத்தா, நீ இப்படிக் கஷ்டப்படறதைப் பார்க்க எனக்குச் சங்கடமாயிருக்கு. எத்தனை நாளேக்கு நீ இப்படி வெயிலிலும் மழையிலும் ஊர் ஊரா அலைஞ்சு கஷ்டப்படப் போறே ? . - - என்ன செய்யலாம் கண்ணு ! நீ சீக்கிரம் படிச்சுப் பாஸ் பண்ணிட்டா அப்புறம் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லே’ என்று அவனைச் சமாதானப்படுத்துகிறபோதே கிழவருக்கு அசாத்திய இருமல் வந்துவிட்டது. அந்த இருமலில் அவர் உடலே குலுங்கி அதிர்ந்தது. முதல் நாள் மழையில் அலேந்து திரிந்துவிட்டு வந்திருந் ததால் அவருக்குத் தலைவலி, இருமலுடன் லேசார ஜூரம் வேறு கண்டிருந்தது. • * , " நாராயணு, நாராயணு !' என்று சொல்லிக் கொண்டே தரையில் படுத்துவிட்டார் தாத்தா. "ஐயோ, தாத்தாவால் வெளியே போக முடியாதே ! தாத்தாவுக்கும் எனக்கும் யார் சாதம் போடுவார்கள் ? எப்படிச் சாப்பிடுவது அரிக்கு என்ன செய்வது?-ரங் குடுவின் இளம் உள்ளத்தில் பெரும் திகைப்பும் திகிலும் தோன்றிக் குழம்பின. - - தாத்தாவுக்குத் தெரியாமல் குடிசையை விட்டு வெளியே சென்ருன் அவன் ; சற்று நேரத்திற்கெல்லாம் மூன்று ரூபாயுடன் திரும்பி வந்தான். - “தாத்தா, உனக்கு மருந்து வாங்கிக்கொண்டு அப் படியே கடைக்குப் போய் அரிசி வாங்கிக்கொண்டு வரட்டுமா 2” - மருந்தும் அரிசியும் வாங்கப் போறயா ? உன்னிடம் பணம் ஏது ?- ஆச்சரியத்துடன் கேட்டார் கிழவர்.