பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருக்குறள் கதைகள் விட்டேன்? சாரங்கபாணி தம் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டார்.

  • அம்மா !' என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்த நாராயணசாமியை அவன் தங்கை பாப்பாவும் தாயாரும் எதிர்கொண்டழைத்தார்கள். -

முதலாளிக்கு ரொம்ப நஷ்டம் வந்துட்டுதம்மா. அப்பா உயிரோடு இருந்தால் இதைக் காதால் கேட்கவே ரொம்பக் கஷ்டப்படுவாரு. நல்ல வேளை அவர் இப்ப இல்லை." உன்னைக்கூடவா அந்த முதலாளி வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாரு ? என்று ஆத்திரமும் கோபமும் பொங் கக் கேட்டாள் அவன் தாயார். ஆமாம்மா நான் மட்டும் என்ன ஒசத்தி ? எனக்கு முன்னலே புடிச்சு வேலை செய்யறவங்களையே எடுத்துட்டப் புறம் என்னை மட்டும் எப்படி வெச்சிருக்க முடியும்? முதலாளி ரொம்ப நியாயமாத்தாம்மா செய்திருக்காரு...' ரொம்ப நியாயத்தைக் கண்டுட்டே நீ! உங்க அப்பாரு உழைச்ச உழைப்புக்கு முதலாளி செய்யற உபகாரமா இது ? இப்போ நானே நேரில் போய் அவரைக் கேக்கறேன். அவர் என்ன பதில் சொல்ருருங்கறதைப் பார்க்கலாம். என் குடும்பத்தை நடுத் தெருவிலே தவிக்கவிட்ட அந்த முதலாளி நல்லாயிருப்பாரா?' - அம்மா! அந்த உத்தமரைப்பற்றி இந்த மாதிரி இன்னொரு தடவை பேசாதே ! நீங்க என்னைப் பெற்ற அம்மாங்கறதாலே பொறுத்துக்கிட்டிருக்கேன். நீங்க போய் அவரை இப்ப ஒண்னும் கேக்க வேண்டாம். இந்தச் சமயத் திலே, அவரை ஏதாவது கேட்டீங்களானல் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற அவர் மனசு மேலும் புண்பட்டுப் போகும். - - r - நமக்கு அவர் தனியாக எந்தச் சலுகையும் காட்டறதை நான் விரும்பவில்லை. அப்பாரு கஷ்டப்பட்டு உழைச்சாரு :