பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - - 85 ' என்ன லார் என்ன வேண்டும் ?’ என்று கேட்டார் சாரங்கபாணி, - ஒன்றுமில்லை : நான் வந்த வேலை முடிந்துவிட்டது. தகுந்த காரணத்துடன்தான் தாங்கள் 130 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறீர்கள் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை. ஆகையால் சாரங்கா மில் ஆள் குறைப்பு விஷயம் நியாயமாகவே நடந்திருக்கிறது என்று நான் மேலிடத்துக்குத் தெரியப்படுத்தி விட்டேன். இதைச் சொல்வதற்காகத்தான் தங்களைக் கூப்பிட்டேன் ' என்ருர் அந்த ஆபீஸர். - இவ்வளவுதான? அந்த 130 பேரையும் மீண்டும் வேலை யில் சேர்த்துக்கொள்வதற்கு எப்படியும் தாங்கள் ஒரு யோசனை கூறுவீர்கள் என்றல்லவா எதிர்பார்த்தேன் ? ஒரு வழியும் புலப்படவில்லையா ?...ம்...சரி...பார்க்கலாம்' என்று கூறிவிட்டு ரிஸிவரைக் கீழே வைத்தார் சாரங்கபாணி. ஐயா !...' அவர் காதுகளுக்குப் பழக்கமான குரல் அது ! * யார் அது ?’-சாரங்கபாணி வாசலுக்கு வந்தார். தட்டில், வெற்றிலே, பாக்கு, புஷ்பம் இவற்றுடன் நின்று கொண்டிருந்தான் நாராயணசாமி. - நாராயணசாமியா?...வா, வா...என்ன இதெல் லாம் ?: ' - தங்கச்சிக்குக் கலியானம் நிச்சயம் செய்திருக்கேன். வாச்மேன் வடிவேலுக்குத்தான் கொடுக்கப் போறேன். என் தந்தை உயிரோடு இருக்கப்பவே முடிவு செஞ்ச சம்பந் தம் இது. நீங்க கிட்ட இருந்து நடத்தி வைக்கனும். வீட்டிலே பெரியவங்க இல்லாத குறையை நீங்கதான் தீர்த்து வைக்கணும். இத்தனை நேரம் இங்கே நடந்த பேச்சு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். உங்க நல்ல குணத்துக்கு ஒரு கெடுதலும் வராதுங்க. ஆல்ை...' என்று இழுத்தான் நாராயணசாமி. - " ஆளுல், என்ன சொல்லு:?’’