பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98;

கடப்பாடு என்ற பொருளில் ஒப்புரவு, ஈகை, வேளாண்மை,

என்ற சொற்களை எல்லாம் வழங்குவர் அறிஞர். 'கடப்பாடறிதலாவது, இல்லென

இரந்து வந்தார் யாவர்க்கும் வரை.

யாது கொடுக்கு மாற்றலிலரெனி னும், தம்மள விற்றாம், தம் வரு வாயளவிற்கும் ஏற்கத் தக்கார்க் குத் தக்கன வறிந்து கொடுத்தல்' என்கிறார் மணக்குடவர். 'உலக நடையினையறிந்து செய்தல் என்கிறார் பரிமேலழகர், மணக்குடவர் கூறிய பொருள் ஒரு வகையில் ஈகையின் பாற்படுமாக லானும், பரிமேலழகர் கூறிய பொருள் ஒரு வகையில் ஒழுக்கத் தின்பாற் படுமாகலானும் ஒப்பரவு. கடப்பாடு என்பதற்கு உலகிற்குச் செய்யும் உபகாரம், உதவிகள் எனப் பொருள் கொள்ளல் சிறப்பே ஆகும். கடலில் = ஆராயாமல் செய்த உதவியின் நன்மை, கடலை விடப் பெரியதாக இருக்கும், (103). கடலும் ஆற்றா - கடலும் தாங்க முடியாத அளவுக்குப் பெரும், (1175), கடலை = துன்பம் உண்டாக்கு

கின்ற கடலினை , (1200). கடலை ச்ெறாய் = கடலைத் துர்க்க

முயல்வாயாக, (1200). கடல் = கடத்தற்கரிய கடல், (10); பெரிய கடல், (17); தேர் கடல்

ஒடா, மரக்கலம் நிலம் ஓடா

போல், (496); கடல் போன்ற

காதல் நோய், (1137); கடல்

போல பரந்துள்ள நோய், (1164): கடல் போன்ற இன்பம், (1166}; கடலைவிடப் பெரிய அளவுக்கு, (1175).

திருக்குறள் சொற்பொருள் சுரபி

கடவுள் = திருக்குறளின் முதல் அதி

காரம் இது. கடவுள் இறைவன்; உள்ளத்தைக் கடந்தவன். கடவுள் வாழ்த்து என்பர் பலர்; கடவுள் வழிபாடு என்பர் சிலர்: ஆதி பகவன் என்பர் வேறு சிலர்; அறிவின் சிறப்பு என்பர் பகுத்தறிவாளர்கள். இந்த அதிகாரத்தில் கடவுளைச் சுட்ட, ஆதி பகவன், வாலறி வன், மலர்மிசை யேகினான்;

வேண்டுதல் வேண்டாமை யிலான்; இறைவன்; பொறி வாயில் ஐந்தவித்தான்;.

தனக்குவமை இல்லாதான்; அற வாழி அந்தணன் எண் குணத் தான் என்ற சொற்களை ஆட்சி செய்துள்ளர் திருவள்ளுவர் பெருமான். கடவுள் திருவடிகளைப் போற்ற: நற்றாள்; மாணாடிதாள், அடி என்ற அருட்சொற்களை ஆண்டுள்ளார். ஐசுவரியம், வீரியம், கீர்த்தி, திரு, ஞானம்; வைராக்கியம் என்ற ஆறு வாழ்வியல் கூறு களைப் 'பகம்' என்ற சொல் குறிக்கும். அவற்றை உடையவன் 'பகவன். இவை ஆறும் தாயின் கருவிலேயே உருவாகுபவை என்பர் ஆன்றோர். பூதங்களின் உற்பத்தியையும், முடிவையும், வரவையும், செலவையும், வித்தியையும், அவித்தியையும் அறிபவனைப் பகவன் எனவும் அறிவர் கூறு வர். அத்தகைய பகவருள் முதன்மையானவன் ஆதிபகவன். யார் அந்த ஆதிபகவன்? தூய்மையான அறிவுடையவன்; தாமரைப் பூவின் மேலுள்ள வன்? விருப்பு வெறுப்பு அற்ற