பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

99

வன்; ஒரே ஒரு தலைவன்; ஐந்தனது இந்திரியப் பற்றற்ற வன்; தனக்குவமை இல்லாத

வன்; அறவாழி அந்தணன்; எண்

குணத்தான் என்ற கடவுள் இலக்கணம் பெற்றவனே அந்த

ஆதிபகவன்!

ஆதி பகவன் என்ற சொல்!.

பண்புத் தொகை சொற்களடி யாய் பிறந்த குறிப்பு வினைகளா கும் என்ற சொற்பொருளை விரித்துக் கூறுகின்றது திருக் குறள் அறத்துப் பால் பாலருரை.

'அறியாமை உலகத்தி லிருந்து அகன்று, அறிவுடைய பயன் படும் உலகத்திற்கு மக்களை அழைத்து வருவதற்கு முன்னோடியாக இருந்து, அறி வாலும், ஆற்றலாலும், பண் பாலும் சிறந்து விளங்கி, வழி காட்டக்கூடிய 'அறிவின் சிறப்புப் பற்றிக் கூறுதல் எனப் படும்' என்று நாவலரின் திருக்

குறள் தெளிவுரை - கடவுள் !

வாழ்த்து’ என்ற பகுதிக்கு ஆய்வு மகுடம் சூட்டி அழகு பார்க்கின்றது. 'ஆதி பகவன் ஆவதற்குக் காரணமான அறிவன். ஆதல், ஆதி போன்றவை தொழில் பெயர்ச் சொற்கள் ஆகும். ஆதல் - ஆவது; மனித சமூகம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு அடிப்படைக் காரணமான அறிவன் என்று பொருள்படும்’

'பகவன் என்பதற்கு அறிவன் ஆசிரியன், அருகன், புத்தன் போன்ற பல பொருள்கள் உண்டு. இங்கு கொள்ள வேண்டிய பொருள் அறிவன் என்பதேயாகும். இரண்டாவது குறளில், வால் அறிவன் என்று

வள்ளுவர் பயன்படுத்தியிருப் பது கூர்ந்து நோக்கத்தக்கது. பகவு+அன் = பகவன், பகவு - பகுத்தறிதல், பகவன் - பகுத்தறி பவன்; அதாவது அறிவன். அறிவன் என்பது, அறிவிற் சிறந்தோனைக் குறிக்கும். இக் குறட்பாவிற்கு உரை எழுத வந்த பரிமேலழகர் : 'உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து’ என்று உரை எழுதிவிட்டு, 'ஆதி பகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை வடநூன் முடிவு' என இலக்கணம் கூறி யதுடன், காணப்பட்ட உலகத் தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுமாத லின்... முதற் கடவுளது உண்மை கூறப்பட்டது” என்று அவர் விளக்கமும் தந்துள்ளார். 'ஆதி பகவன் என்ற சொற் றொடர் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக உள்ள படியே இருந்திருக்குமே யானால், 'ஆடித் திங்கள்', 'சாரைப் பாம்பு’ என்பன போன்று, வல்லின ஒற்று மிகுந்து, 'ஆதிப்பகவன்'என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், திருவ்ஸ்ளுவர் அப்படிக் குறிப்பிடவில்லை. 'ஆதி பகவன்’ என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தமிழ் இலக்கணங் களையே பின்பற்றிக் குறட் பாக் களைப் புனைந்த வள்ளுவர், தமிழ் இலக்கணத்தை ஒதுக்கித் தள்ளி விட்டுப் பரிமேலழகர்

கருத்துப்படி வடநூல் மரபு'

என்ற முறையில் வடமொழி இலக்கணத்தை ஒருபோதும்