பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

05

(383); கற்றலை, (398, 400, 684, 717, 939).

கவரிமா = இமயமலைப் பகுதியில் வாழ்ந்த ஒரு வகை மான் இனம் என்று கல்வியாளர்கள் கூறு கிறார்கள். போர்க் கலைகள் தெரி யாத குதிரையைக் 'கல்லாமா? என்று குறிப்பிடுவதைப்போல, இதனை ஒரு விலங்கு வகை மான் என்று சுட்டிடக் கவரிமா என்றும் கூறப்பட்டுள்ள ஒரு சொல், (969). கவர்ந்து பறித்துத் தின்றிட

விரும்பி உண்டிட, (100). கவலை = துன்பம், வருத்தம், (7). கவறு சூது, (920); சூதாட்டக்

காய், (935). கவிகை = ஆட்சிக் குடை, (389). கவிழ்ந்து = தலை குனிந்து, (1114). கவின் = இயற்கை அழகு, (1234,

1235, 1250).

கவுள் = முகம் ச்ார்பாகவுள்ள கன்னத்தையுடைய பகுதி, (678).

& - 签 * -

அலர் தூற்றும் இழி, பழி மொழி வளர்ந்து வருவது, (1144). கவ்வை - பழி தூற்றிப் பேசுவது,

(1144). கழகத்து = சூதாடும் களத்தினிடத் திலே, (937), இந்தச் சொல்லை இப்பொழுது அரசியல் கட்சிகள் பெருமையாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. கழகம் = சூதாடும் இடம், (935). கழல் = வீரத்தைச் சுட்டும் தண்டை,

(777). கழல் யாப்பு = கால்களில் வீரக் கழலை அணிந்துக் கொளல், (777).

கழாஅ = கழுவாத, (840).

மிகுதலையுடையது,

கழா அக்கால் = அசுத்தத்தை

மிதித்துக் கழுவாத கால், (840}. கழி = மிக, (57); அதிகப்படி யான,

(657, 866, 946). கழிபெரும்= மிகப் பெரிய, (571, 866). கழிபேர் = மிக அதிக, கழிபேர், கழிபெரு என்ற இரண்டு சொற் களும் ஒரே பொருளை தரு கின்றன, (9.46).

கழிய = மிக, (404). கழியும் = நீங்கும், (378); செல் கின்ற, (1169); கழலும், (1262): களத்து = களரியில், (1224). களின் = சேற்று நிலத்தின், (500). களர் = உவர்நிலம், சவர் நிலம், (406). களவினால் = திருட்டினால், (283).

களவு = திருட்டு, (284, 286, 287,

288, 289).

களவு கொள்ளும் = காதலி அறி யாமல் பார்க்கும் பார்வை, காதலி திருட்டுத்தனமாக

நோக்கும் பார்வை: (1992). களன் : அவை, அவையில்

கூடியிருப்போர், (730). களி - கள்ளுண்டு மகிழ்தல், (923);

மயக்கம், (1145). களித்தல் = தலை கால் தெரியாத மகிழ்ச்சிப் போதையால் ஆடிப் பாடி பேசிடும் உற்சாகம் மிகுதல், (12.81). களித்தறியேன் = மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைவாகக் கள்ளை யுண்ட பிறகு, நான் கள் குடிக்க வில்லை எனப் போதையால் அறியாமல் கூறுதல், (928). களித்தற்றால் = கள்ளுண்டபின்பு

களித்தது போலும், (838). களித்தார்க்கு = கள்ளுண்டு மகிழ்ந்

தவருக்கு, (1288).