பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி.

107

அவ்வாறு நடத்தும் குடும்ப வாழ்க்கையில் கணவன் கல்வி பெறவோ, பொருள் தேடவோ தலைவியை விட்டுப் பிரிந்து

கடல் கடந்து ச்ெல் ல் நேரிட்டால், தலைவன் கற்பித்த ஒழுக்கத்திற்கு ஏற்றவாறு

நடந்துக் கொள்ளும் பதி விரதத் தன்மை அதாவது நல்லொழுக் கம் என்பர் சான்றோர். அதைக் கற்பு என்றும் குறிப்பிடுவார்கள். 'கற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்' என்றும் சொல்வ துண்டு. தலைவியானவள் தலைவன் பிரிவு ஆற்றாமை யால் வருந்துவதும் உண்டு. அந்த நேரத்தில் கணவன் பிரிவு எண்ணமே அவளை வருத்தும். அப் போது இல்லற நல்லொழுக் கம்தான் அவளுக்குரிய துணை யாக நிற்கும்; நிற்க வேண்டும் என்பதே கற்பு ஆகும்.

அதைத் தவிர கருப்பு, சிவப்பு என்ற சொற் ஜால மாயங்கள் ஏதும் அவளிடம் அணுகா. அந்த அளவுக்குத் தலைவனது பற்று ஒன்றே அவள் மனத்தில்

அசைக்க முடியாதத் திண்மைக்

காட்சிகளாக நடமாடும். அதனைத்தான் கற்பெனக் கூறுவர் இல்லறத்தார். திருவள்ளுவர் தாம் எழுதிய வாழ்க்கைத் துணை நலம்' என்ற அதி காரத்தின் 54-வது குறளில். "பெண்ணின் பெருந்தக்க யாஉள கற்புஎன்னும் திண்மை உண்டாகப் பெறின்' என்ற வினா குறட்பாவைக் கேட்டு, கற்பு என்பதற்கு, மன ஒழுக்கத் திண்மை; என்ற சொற்களால் விளக்கம் தருகிறார்.

பெருமானும், !

'இல்லறத்தில் காதலன்பு காரண மாகக் கொண்ட மன உறுதி' என்கிறார். இந்த நற்பண்பு ஆண் - பெண் என்ற இரு பாலரிடமும் எதிர் பார்க்கப்படும் குடும்ப விதி என்றுரைக்கின்றார்.

இதைத்தான் கவிஞர் பாரதி யாரும், கற்பை இருபாலருக் கும் பொதுவினில் வைப்போம்' என்று குறிப்பிட்டார். எனவே, கற்பு என்பது இல்லற ஒழுக்க மன உறுதி என்பதே பொருத்தமான பொருளா கும். இது ஆணுக்கும் ஆணி வேர், பெண்ணுக்கும் மனவேர் ஆகும்.

கற்றக்கடைத்தும் = கற்றவிடத்தும்,

(823).

கற்றதனால் = படித்தக் கல்வி அறி

வினால், (2).

கற்றது = கற்ற நூல், (650). கற்றறிதல் = நீதி நூல்களைப்

படித்து, அதனதன் விதிவிலக்கு களை உணர்தல், (632). .

கற்றறிந்தார் காமுறுவர் = படித் தறிந்தவர்கள் அவற்றைப் பிறருக்கு கூற ஆசைப் படுவார்கள், (399).

கற்றனைத்து = எந்த அளவுக் குப் படித்தார்களோ அந்த அளவுக்கு, (396).

கற்றார் = படித்ததால் உயர்ந்த பண்பாளர், (395); நூல் களைக் கற்றவர், (403, 409, 722).

கற்றான் = மருந்து எனும் 95-ஆம் அதிகாரத்தில் இச் சொல் வருவதால் மருத்துவ நூல்களது நெறிகளைக் கற்ற மருத்துவன், (949),