பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி

134

செய்யாது அமைகலா ஆறு = செய்ய முடியாமல் வருந்து வதற்குரிய பண்படையாள மாகும், (219). செய்யாமல் = ஒர் உதவியை முன் கூட்டியே செய்யாமலிருக்க, (10.1}; எந்தவிதமான ஒரு துன்பச் செயலையும் முன்பே செய்யாதிருக்க, (313). செய்யாமை = செய்யாதிருப்பது,

(157, 261, 267). செய்யார் = செய்யமாட்டார், (164). செய்யாவிடல் = செய்யாது விட்டு

விடல், (203). செய்யாள் = செல்வத்திற்குரிய செல்வி; பெண் தெய்வம் பெயரால் திருமகள் என்பாரும் உண்டு, (84), செய்யான் = செய்ய மாட்டான், (210); செய்யாதவன், (865). செய்யின் = செய்தால், (157). செய்யும் நீர = செய்ய வேண்டிய

கடமைகளை, (219). செய்வாரின் = செய்வாரைக் காட்டி

லும், (295). செய்வானேல் = தப்பித் தவறி ஒரு வேளை செய்து விடுவானே யானால், (655). செய்வினை = செய்யும் வினை அல்லது செயல், (455); செய் கின்ற வினையை அல்லது செயலை, (677). செய்வேன் = (1211). செரு = போர், (569). செருக்கி = இறுமாந்து, கள்ளுண்

டார் போல் களித்து, (916). செருக்கு = செல்வம், மகிழ்ச்சி, பெருமிதம், மேம்பாடு, (180, 598, 613, 8 60); ஆணவம்,

விருந்தளிப்பேன்,

அகம்பாவம், அகங்காரம், அகந்தைத் தினவு, (201, 431); அகந்தை, மயக்கம், (346, 759); ஒரு விதமான மயக்க கிறுகிறுப்பு, (344); கள்ளுண்ட போதைக் களிப்பு, (878, 1193). செல = எளிதாகக் கூறி, (422); மனம் கொள்ளும் படி, (424, 686, 719, 722, 724, 728, 730). செலல் : செல்கின்றது,

வதற்குக் காரணம், (1293). செலவிடாது = போக விடாது,

செல்ல விடாது, (422). .

செலவு = செல்லுதல், (766). செல் இடத்து = தனது கோபம் செல்லக்கூடிய, பலிக்கக் கூடிய இடத்தில், (301). செல்க செல்வானாக, (684). செல்கிற்பின் = விரைந்து செல்லக் கூடியனவாக இருக்குமே யானால், (1170).

செல்பவர் = செல்கின்றவர், (1033).

செல்

செல்லா = செல்லாத, தனது கோபம் பலியாத, (302); உணவு செல்லாத - மனக்குடவருரை. வறுமை கூர்ந்த, (330), செய் யாத, (561); நீங்காத, (769); தொடர்ந் துப் போகாத, (1255). செல்லாதது = முடியாதது, (472). செல்லாத் துணி = எதனாலும் முடிவு பெறாத அரசு பிணக்கு அரசினி டம் நீங்காத வெறுப்பு, (769). செல்லாமை = பிரியாமை, (115). செல்லா வாழ்க்கை = வறுமை மிகுந்த நோயுடல் வாழ்க்கையினர், (330). செல்லான் இருப்பின் = நிலம் சென்று பாராதவனாக இருப்பின், (1039).

- செல்லிடத்து = கோபம் பலியாத

இட்த்தில், (250).