பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ho:

பகச் சொல்லி = பிளவு உண்டாகு

மாறு புறங்கறி, (187). பகடு - எருது, (524}. பகலும் இருளின் பால = பகலிலும் இருளில் இருப்பதாகவே ஒருணர்வு தோன்றும், (999). பகல் = கூற்றில், காலத்தில், (319); பகற்பொழுது, (481, 1227); శోLLFశt£, வ்ேறுபடு தல், மாறுபடுதல், (58, 852). பகவன் = கடவுள், (1); பகவன் என்ற வடசொல்லின் வேறு பாடெனக் கூறுவர் சிலர். பகவன் என்பது பகலவன் திரிபு என்பர் வேறு சிலர். பழங்காலத்

தமிழர்கள் பகலவனையே முதன்

முதல் கண் கண்ட கடவுள் எனக் கொண்டதாக ஆய்வாளர் கள் அறிவிக்கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன், இப் பகவனை பகவு + அன் என்று சொல் பிரித்து ஆண்பால் இறுதி நிலை பெற்றது. பகல் அறிவு ஆகு பெயர். பகவன் ஆண் பாலாற் சொல்லப்படினும், பகவு அஃதாவது உணர்வு என்றே கொள்க என்கிறார். அதாவது, பகலவன் என்றே பொருள் கொண்டார். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், தனது தமிழ் மரபுரை சுருக்கத்தில் பகவனை,

'முதற்பகவன்’ என்றே சுட்டுகின்றார். வித்தியா ரத்தினம் டாக்டர்

பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, !

தனது திருக்குறள் பாலருரை

யில், பகவன் என்பதற்கு 'கடவுள்' என்று கூறுகிறார். டாக்டர் நாவலர் நெடுஞ்செழி யன் தனது திருக்குறள் தெளி வுரையில், 'பகவன்' எனில் 'அறிவன்' என்று உரை கூறி, பகவு + அன் = பகவன் என்று சொல் பிரித்து, டக வைைர, பகுத்தறிபவன். அதாவது அறிவிற் சிறந்தோன் என்று ஆய் பொருள் அறிவித் துள்ளார். ஆதிபகவன் இரு பெயரொட்டுப் பண்புத் தொகை அன்று என்று அவர் மறுத்துள்ளார். 'உலகம் ஆதிபகவன் என்ற கடவுளை முதலாக உடையது என்று திருக்குறளார் முனிசாமி, தனது கடவுள் வாழ்த்து அதி காரத்தில் குறிப்பிடுகிறார். எனவே, பகவன் என்ற சொல் லுக்குரிய சரியான உரையைக் கூறிட அறிஞர்கள் திணறுகிறார் கள். அவரவர் மதத்திற்கேற்ற வாறு உரை கூறுவது இன்றும் ஒரு தீராதச் சிக்கலையே பகவன் உருவாக் கிக் கொண்டிருக்கிறார்! எதிர்கால 'அறிவு' எப்படிக் கூறுமோ தீர்ப்பு? பகவு = பிளவு, பாதி, (889). பகா எண் = பகைத்து நீங்காமல், (876). பகுதியால் = நண்பர், பகைவ ரென்ற பல்வேறுபட்ட பகுதி யினர், (111). பகுத்து பங்கிட்டு,

கொடுத்து, (322). பகை = மாறுபுடும் பண்பு, எதிரி

யாகுந் தன்மை, (146, 207).