பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

புதல்வர் = புத்திரர், அதிகாரம், (7).

(இது, திருக்குறளில் வரும் 7-வது அதிகாரம். இதனைப் புதல்வரைப் பெறுதல் என்பர் சிலர். மறுசிலர் மக்கட் பேறு என்று கூறுகின்றனர். புதல்வரைப் பெறுதல் என்றால், ஆண்-பெண் மக்களைப் பெறுதல் என்பது பொருள். மனைவி போல; குழந்தை களும், குடும்ப வாழ்விய லுக்கு இலக்கணம் என்பதால், வாழ்க்கைத் துணை நலத்திற்குப் பின்னர் புதல்வதைப் பெறுதல் என்ற அதிகாரத்தைத் திருவள்ளு வர் பெருமான் எழுதினார் என்று வாதாடுகின்றார்கள் - புதல்வ ரைப் பெறுதல் என்ற உரை அணியினர். இதற்கு பரிமேலழகர் கூறும் விளக்கம் இது. 'புதல்வனை யும், புதல்வியையும் பொது வாய்க் குறிக்கும் சொல் புதல்வர் என்பதே ஆகும். புதல்வர் என்பது புதல்வன்

என்ற சொல்லின் பன்மை யெனக் கொண்டு, மக்க ளென்னும் பெயர் பெண் னொழித்து நின்றது என்பது தன்; பரிமேலழகர் கூறும் ஆய்வு.

திருக்குறள் 67, 69, 70 என்ற மூன்று குறட்பாக்களிலும் கூறப்பட்ட மகன் என்ற

சொல்லும், ஆண்-பெண் இரு வரையும் குறித்தல் தகும்.

ஆசிரியர் தொல்காப்பியனார்; ஆண் மகன், பெண் மகன் எனத் தொல்காப்பிய இலக்கண நூலில் வழங்குகின்றமையின் ஆகலின், புதல்வரைப் பெறுதல் என்பதற்கும் 'மக்கட்பேறு என்பதற்கும் பொருள்

திருக்குறள் சொற்பொருள் சுரவி

ஒன்றே யாம் - என்று. 'புதல்வரைப் பெறுதல் - மக்கட்பேறு' என்ற ஓர் அதிகாரத் திற்கு இடப்பட்ட இருவிதத் தலைப்பு ஆய்வணிகள், வாதாட்டங்களுக்கு சமரசம் செய்து வைத்துள்ளார் - வித்தியா ரத்தினம் டாக்டர் பி.எஸ். சுப்பிர மணிய சாஸ்திரியார். எனவே

சொல்லாய்வாளர்கள் சிந்திக்க....

புதை = அம்புக் கட்டு, (597). புத்தேளிர் = தேவர், (58).

{வான் புகழ் கொண்டோர் இடம் பெறும் புகழ் உலகம் புத்தேள் என்பது. புத்தேள் என்பது, 'புத்தாள்’ என்பதன் திரிபுச் சொல்லாகும். புத்தாடை, புத்தாண்டு, புதுப்பானை என்ற சொற்களைப் போன்று வருவது. நிலவுலகத்தை விட்டு மறைந்த பிறகு, சிலர் புகழ் உலகத்தில் நிலைத்து நிற்கும் புகழுடை யோர் ஆகின்றனர். அவர்கள் புதிய புகழ் வாழ்வு எய்தி, புதுமை பெறுகின்றனர்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ் பவர் வானுறையும் தெய்வத் துள் வைக்கப்படும்’ என்ற குறளின் கருத்து நோக்கத் தக்கது. வானுறையும் தெய்வம் என்பது புகழுடைய பெரியோரைக் குறிக்கும். புகழ் உலகத்தில் என்றும் நின்று நிலவும் மேலோர் 'புத்தேளிர்’ எனக் கருதப்படுவர் - என்று, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தனது திருக்குறள் தெளிவுரையில், 'புத்தேளிர் என்ற சொல்லுக்கு ஆய்வுரை வழங்கியுள்ளார். பிற, வாசகர் சிந்தனைக்கே உரிமை.)

புத்தேளுலகு = தேவருலகு, (213,

234, 290).