பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 திருக்குறள் சொற்பொருள் சுரபி

'வீடு என்பது விடுதலை; பற்று விடுதலை; பற்று என்பதை ஒரே சொல்லாற் சொல்லப்போனால், தன்னலம் என்று சொல்லி விடலாம். இவ் விடுதலை வாழையில் மிக நன்றாகத் தெரிகிறது.

வாழை மரம் குலை விடுகிற வரையில் வாழ்கிறது. அப்புறம் அது வீழ்கிறது. அதனால் குலை விடுவதற்காகவே அது அடுக்கடுக்காய் இலை விட்டு வளர்ந்து வந்ததாகத் தெரிகிறது.

அந்த நோக்கம் நிறைவேறியவுடன் தன் கடமை தீர்ந்ததாகவும், தான் தோன்றி வளர்ந்த முயற்சி வெற்றியுற்றதாகவும் துணிந்து, தன் உயிர் வாழ்க்கையை முடித்துக் கொள்ள - அது, ஏற்பாடாய் இருக்கிறது.

அப்படி வாழ்வின் ஒரே நோக்கமாய், ஒரே தடவையாய், ஒரே குலையை வழங்கிவிட்டு உயிர் விடுகிற அந் நிகழ்ச்சியில் மிகவும் உருக்கம் தருகிற உண்மை, அத்தகைய ஒரே குலையையும் தனக்காகவோ, தன் கன்றுகளுக்காகவோ ஒரு சிறிதும் வைக்காமல், முழுதும் பிறர்க்காகவே, அதாவது உலகுக்காகவே வழங்கி விடுவதுதான்!

முழு விடுதலைக்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு உள்ளது?

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் - அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (72) - என்னும் பற்றற்ற வாழ்க்கைப் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் தன் உடலின் நடுத் தண்டையும் பிறர்க்கே உரிதாக்கிவிட்டு மறைந்து விடுகிறது. என்பும் உரியர் பிறர்க்கு என்னும் பண்புக்கு, மனிதரில் எல்லாரும் அப்படியிருக்கின்றனரா? ஆனால், வாழைகள் எல்லாமே அப்படிச் சார்பு நிறைந்தனவாய் இருக்கின்றனவே.

மக்கள் தேடும் தேட்டங்கள் வாழையைப்போல, முற்றிலும், பிறர்க்குப் பயன்படுவதில்லை. பிறர் நலங்களுக்கென்றே தேடப்படுவதுமில்லை.

பக்கங்களிலேயே சூழ்ந்திருந்து, குலை வரையில் கன்றுகள் தாவி வளர்ந்து, காலமெல்லாம் காத்திருந்தாலும், தாய் கடைசியாகத் தள்ளும் ஒரே ஒரு குலைகடத் தமக்குப் பயன்படாமல் பிறர்க்குப் போய் விடுகிறதே என்று சிறிதும் வஞ்சினம் கொள்ளாமல், தாய் வாழையைப் போலவே கன்று களும் அவ்வழியை, அவ் விடுதலையை வழிவழிக் கடைப்பிடிக்கின்றன. 'தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு (212) - என்று தமிழ் மறை கூறும் பற்றற்ற பாண்மையை, முற்றுந் துறந்த முனியுங்கவர் சிலரிடமல்லது ஆறறிவு படைத்த ம்க்கட் பிறப்பினர் அனைவரிடமும் காண முடிகிறதா?

'தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் (348) என்றபடி, வாழையைத் தவிர மற்றையவர் மயங்கி வலைப்பட்டவராகவே பெரும்பாலும் காணப்படுகின்றன்ர்.