பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் திருக்குறள் உரை

காவலன் காவான் எனின்..? தமிழர்கள் ஆண்ட நாளில் அரசியல் ஆறு துறையாய் வகுத்து ஆட்சி நடத்தப்பட்டது. அவை, உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு, வரைவு என்பன.

உழவும் தொழில் என்னும் துறையில் அடங்குமேனும், சிறப்புக் கருதி உழவுத் தொழிலைத் தனித்தனியாக வைத்துக் கருத்துன்றிக் காத்து வந்தார்கள். உழவும் தச்சும் (சிற்பம்) நீங்கிய பிற வேலை அனைத்தும் தொழில் துறையில் அடங்கியவை.

எழுத்து, சொல், பொருள் என்பனவும், கோள் நிலையறிதல், மருத்துவம் முதலியனவும், போர்ப் பயிற்சியும் - கல்வி என்ற துறையில் அடங்கும்.

வரைவு என்னும் துறையாவது யாது? எல்லைப் பிரிவை உறுதி செய்தல், கோட்டை கட்டுதல் முதல் குளம் வெட்டுதல் வரைக்குமுள்ள இடங்களை வரையறுத்தலும் அளவு செய்தலும் முதலியவை.

இந்த ஆறு துறைக்கும் அக்காலத்தில் ஆறு அமைச்சர்களை அமைத்துத் திறம்பட நாட்டைக் காத்து வந்தான் தமிழரசன்!!

ஆறு துறையே அன்றிப் போர்த்துறை ஒன்று தனியே இருந்த வந்ததோ எனில் அவ்வாறில்லை. கல்வி எனும் துறையில் போர்ப் பயிற்சியும் அடங்கியது என்று முன்னமே சொன்னேன். ஒரு துறைக்கு ஓர் அமைச்சனே அன்றிப் பல அமைச்சரை அமைத்தலும் உண்டு.

இந்த ஆறு துறையின் ஆறு அமைச்சர்களுக்கும் அலுவலகம் ஒன்றே: அது இந்நாளைய 'செக்ரடேரியேட் போன்றது. அந்த அலுவலகத்தில் கருமத் தலைவன் ஒருவனிருப்பான். அவன் எல்லாத் துறையிலும் வல்லவன். அவனுடைய அலுவற் பெயர் வள்ளுவன் என்பது.

வள்ளுவன் சாக்கை எனும் பெயர் மன்னற்கு உள்படு கருமத் தலைவற்கு ஒன்றும் என்னும் பிங்கலந்தைச் செய்யுள் இங்குக் கருதத்தக்கது. உள்படு கருமத் தலைமை என்பது வள்ளுவன் என்ற அலுவற் பெயரையே குறித்து நின்றது காண்க.

பின் நாளில் வள்ளுவன் என்ற சொல் சாதியைக் குறிப்பதாக கருதும் நிலை உண்டாயிற்று. இப்படிப் பல. அகம்பட்டன் என்ற சொல்