பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 2*5

அரசனின் அகச் சுற்றம் ஆறில் - மருத்துவப் புலவன் பெயர். இதைப் பண்டிதச் சொல்லாலும் வழங்கி வந்ததுண்டு. இந்நாளில் இழிந்த சாதிக்காரர் என்று எண்ணும்படி ஆக்கப்பட்டிருக்கிறது.

வள்ளுவன் என்ற சொல், வண்மையினடியாகப் பிறந்தது. வண்மை என்றது அறிவு வளத்தை (நம் திருவள்ளுவர் இயற்பெயர் தேவர் என்பதும், அவரின் அலுவற் பெயரே வள்ளுவர் என்பதும் இங்கு நாம் அறிந்து இன்புறுவோமாக).

அந்நாளில், அரசியல் பொறி என்ன அழகாக, எவ்வளவு திட்டவட்டமாக இயங்கி வந்தது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும். இதை விவரிக்க இங்கு இடம் போதவில்லை. கோனாட்சி, குடியாட்சி, குடிக்கோனாட்சி என்ற அரசியல் முறைகளில் அந்நாளைய ஆட்சியைக் குடிக்கோளாட்சி எனல் வேண்டும்.

இந்நாள் சில நாடுகள் நல்லதோர் ஆட்சி முறையில் நடந்து வருவன என்று நாம் எண்ணுகிறோம். இருக்கலாம், அதுமட்டுமல்ல, இன்னும் சில சிறந்த வகையில் ஆட்சி முறை வகுக்கப் படலாம். அவை அனைத்தும் பண்டைய தமிழ் வகுத்த குடிக்கோனாட்சி யில்தான் வந்து முடியும் என்பது மறுக்க முடியாது.

குடிக்கோனாட்சி ஒன்றுதான் சனநாயகம் - குடியாட்சி என்பதெல் லாம். மக்களின் நன்மையை - அவர்களின் முழுதுரிமையை முன்னின்று நடத்த என்றைக்கும், எங்கும் ஓர் ஆள் வேண்டும். மக்களே நேரிலிருந்து தமக்கு வேண்டியவற்றைச் செய்து கொள்வதென்பது முடியாதது.

முடுக்கி விட்டால், அரசியற் பொறி (எந்திரம்) தன்னிலையில் சுழன்று கொண்டு போகுமே, அதற்கு அரசன் எதற்கு என்று கேட்கலாம். இது அறிவற்ற கேள்வி. பொறி இயக்குவோனின் அன்புள்ளம், அப்பொறி இயங்க இன்றியமையாத ஓர் மின்னாற்றல்.

அரசன் தன் காத்தற் தொழிலைச் செவ்வனம் செய்யான் எனில் ஆறு துறையும் நடவா. நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும். இவற்றை எல்லாம் வள்ளுவர் நமக்கு ஒரே குறளில் காட்டுகின்றார். பழந்தமிழ் நாட்டின் படப்பிடிப்பை நாம் அறிந்து கூத்தாட வேண்டும் என்ன?

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் 'கொடுங்கோன்மை அதிகாரத்தில் 10-ஆம் செய்யுள் இது. காவலன் காவான் எனின் ஆபயன் குன்றும். அறு தொழிலோர் நூல் மறப்பர் என்று மொழி மாற்றிப் பொருள் கொள்க.

ஆபயன் என்பதற்குப் பரிமேலழகர் பசுவின் பயன் (பால்) குறையில் என்று பொருள் கொண்டார். அவர் ஆபயன் என்றதை ஆவினது பயன் என ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டார். அவ்வாறு கொண்டால் ஆபயன் என ஒற்று மிகவேண்டும். ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் கோவலர் என்ற சிலப்பதிகாரத்திற் போல!