பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருக்குறள் சொற்பொருள் சுரபி

எனவே, ஆபயன் வினைத்தொகை நிலைத் தொடர் என்க. காலங்கரந்த பெயரெச்சம் வினைக்குறை என்பது வினைத் தொகை இலக்கணம்.

"ஆபயன் என்பது ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும். இங்கு ஆனபயன் என்ற இறந்த காலத்துக்கு விரிக்க ஆபயன் (ஆனபயன்) என்றால் அரசன் நல்லபடி ஆண்டு வந்தபோது ஆனபயன் என்பது பொருள். அவையாவன : பகையரசர் அஞ்சிக் கப்பம் கட்டுதல், வரி வரவு முதலியவை.

இனி, அறுதொழிலோர் என்பது உழவு, தொழில், வாணிகம், கல்வி, தச்சு வரைவு ஆகிய ஆறு தொழிலுக்குரியோர். அவர் தாம் ஆறு அமைச்சர்,

நூல் மறப்பர் - தம் கொள்கையை விடுவர் நூல் - கொள்கை மறத்தல் - கைவிடுதல். இனிப் பரிமேலழகர் அறுதொழில் என்பது ஆரிய மறையோதுதல், ஒதுவித்தல், வேட்டல் (கொலை, வேள்வி முதலியவை), வேட்பித்தல், அறிவு தரல், பிச்சை புகல் ஆகிய ஆறு தொழில் என்றார். பொருந்துமா? ஆரியர், தீயொழுக்கம் தமிழர்பால் தலைநீட்டத் தொடங்கக் கண்டருளிய வள்ளுவர் அவற்றை மறுத்துத் தமிழரை தமிது நெறியில் நிறுத்த அருளிய திருக்குறளில், ஆரிய் அறுதொழில் இந்நாட்டில் நடவாது ஒழிந்து விடுமே என்றா அழுவார்? எனவே, பரிமேலழகர் கொண்ட பொருள் பொய்ப் பொருள் என விடுக்க.

- தென்றல் மலர் : இதழ் 21 (5.1.1.55)

வள்ளுவர் உன்னம் உரைப் பாயிரம்

சீரோங்கி வாழ்ந்த திருவள்ளுவர் இப் பாரோங்கி வாழச் செந்தமிழால் திருக்குறள் என்னும் செய்யுள் செய்யத் திருவுளங் கொண்டார்.

செய்யுள் என்பது செவ்விய உள்ளம். அஃது நூலுக்காயிற்று. ஆகுபெயர். இனி எப்பொருள் கொண்டு செய்யுள் செய்தார் என்பது கேள்வி, நிலம், நீர், நெருப்பு, உயிர், விசும்பு ஆகியவையும், அவற்றின் பகுதியாகிய உலகம், மக்கள், விலங்கு, பறவை முதலியனவும், சுவை, ஒளி,ஊறு, ஓசை, நாற்றம் ஆகியனவும் அறிவு, முனைப்பு, மனம் ஆதி (மூலப் பகுதி) இறைவன் (பகவன்) ஆகியவையும், அறம், பொருள், இன்பம் ஆகியவையும் அவற்றின் நிலையின்மையும் பிறவுமாகக் கூறப்பட்ட பருப்பொருள் நுண்பொருள் அனைத்தும் பொருள்களே.

இப் பொருள்கள் அனைத்தும் அகப்பொருள் புறப்பொருள் என இரும் பெரும் பிரிவாக்கப்படும். செய்யுள் செய்வார் அகப் பொருளையும் புறப்பொருளையும் வைத்தேனும், இவ்விரண்டில் ஒன்றை வைத்தேனும் செய்யுள் செய்வர். அந்நெறியே பற்றி அகம், புறமாகிய இருதினையையும் வைத்துச் செய்யுள் செய்தருளினார் திருவள்ளுவர் என்பது விடை.