பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 திருக்குறள் சொற்பொருள் சுரபி

ஆரம்பித்தன. அந்த அற்புத மாயங்களை எல்லாம் மீறி நின்று திருவள்ளுவர் சிந்தித்தார்.

கி.மு. 427க்கும் - 347க்கும் இடையே உள்ள காலக் கட்டத்தில் வாழ்ந்ததாக உலக வரலாறு கூறும் கிரேக்க பேரறிஞர் பிளாட்டோ,

"Knowledge has its seat in the head; it is the eye of desire and can become the pilot of the soul' - Piato.

'அறிவு தலைமையாய் நின்று மனித விருப்பத்தை விழுமியதாய் நிறைவேற்றும் விழிபோல உள்ளது. உயிர் வாழ்வு துன்புறாதபடி நல்ல வழிகாட்டியாய் அது அமைந்து நிற்கிறது என்ற கருத்துக்கேற்ப, திருவள்ளுவரது சிந்தனை நிழலாடி இருக்கலாம்:

"The people need the guidance of philosophers; as desires need the entightenments of knowledge' - என்ற அவரது எண்ணத்திற்கேற்ப, உலகில் தோன்றிய ஒவ்வொருவனும் தான் பிறந்த மண்ணுக்குரிய தத்துவக் கடமைகளைச் செய்திட வழிகாட்டும் உரிமையுடை யவனாவான். வீணாகக் காலத்தைக் கழிப்பவன் கடையனாவான்' என்பதால், திருவள்ளுவர், எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்ற குறட்பாவை எழுதித் தமிழ் பண்பாட்டிற்கு மட்டுமன்று - உலக மக்களது வாழ்வியலுக்குரிய இலக்கணமாய், இலக்கியமாய் இன்றும் இயங்கி வருகின்றார்.

s:Glossing)méo, "There is nothing great in the world, but man and inman there is nothing great - but mind.

'மனிதனைவிடச் சிறந்த ஒரு பொருள் இல்லை; மனிதனுக்குள் இருப்பவற்றில் சீரிய அறிவைவிட அரிய பொருள் ஒன்றும் இல்லை" என்ற சாக்ரடீசின் ஞானத்தை அவர் பெற்றிருந்ததே காரணமாகும்.

இத்தகைய உலக மக்கள் வாழ்கின்ற இந்த உலகத்தை; இன்று நான்கு மதங்கள் ஆட்சி செய்கின்றன. அவை-பவுத்தம், கிறித்துவம், இசுலாம், அன்றைய வைதீக மதம் என்று அழைக்கப்பட்ட இன்றைய இந்து மதம் என்பவை ஆகும். இந்த மதங்கள் எந்தெந்த உலக நாடுகளை மதத்தின் பெயரால் ஆதிக்கம் செய்கின்றன; ஆள்கின்றன என்பதை உலக அறிஞர்கள் நன்கு உணர்வார்கள்.

மதம் என்றாலே - கடவுள், உயிர், ஆன்மா, வழிபாடுகள் ஆகிய அந்தந்த மதக் கோட்பாடுகளை அமல்படுத்தும் நெறிகளைக் கொண்டவை. அவற்றை உலகப் பார்வையில் இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.

திருவள்ளுவர் தனது திருக்குறள் நூலை - வெண்பா பாவின இலக்கணத்திலுள்ள இறுதி ஈற்றடிகளின் முதலடியில் நாற்சீர்களாலும், இரண்டாம் இறுதி அடியில் முச்சீர்களையும் அமைத்து, ஏழுசீர்களில் ஏன் எழுதினார்?