பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 227

இறைவனை அடைதற்குரிய படிமுறைகள் நான்கு. அவை : சீலம், நோன்பு, செறிவு (யோகம்) அறிவு என்பவை.

இறைவன் உயிர்களிடத்திலே ஒன்றாய், வேறாய், உடனாய், புணரும் முப்புணர்ப்பால் புணர்ந்து - தனது அருளை, இன்பத்தை உயிர்கட்கு வழங்குபவன் என்பதால், திருக்குறள், பா அமைப்பை ஏழு சீர்களால் உருவாக்கினார். ஏன் அவ்வாறு திருவள்ளுவர் எழுதினார்?

அவர் காலத்தில் ஓரளவு பரவியிருந்த சாங்கியம், மீமாஞ்சம், வைதீகம், சமணம், பவுத்தம், சார்வாகம் போன்ற சமயங்கள், கடவுள் என்ற ஒன்று தேவையில்லை என்று கூறி, இறை கொள்கை இல்லாதவையாக இருந்தன. அறவாழ்வு, அல்லது ஒழுக்கம் மட்டுமே இருந்தால் போதும் மக்கள் வாழ்க்கை சிறக்கும் என்று பிரச்சாரம் செய்திருந்தன.

இந்தச் சமைய நெறியைத் திருவள்ளுவர் மிக எச்சரிக்கையோடு எதிர்த்து, அறவாழ்வு, ஒழுக்கம் அமைந்து நிலை பெறுவதற்குக்கூட, இறை யுணர்வும், வழிபாடும் தேவை என்று வலியுறுத்தி - வற்புறுத்தியதால் தான்.

'அறவாழி அந்தணர் தாள் சேர்ந்தார்க்குஅல்லால் பிற ஆழி நீந்தல் அரிது (3) 'பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்; ஒழுக்க நெறி நின்றார் நீடுவாழ் வார் (6) - என்ற இறை ஒழுக்க நெறிகளைக் கூறினார். திருவள்ளுவர் தான் எழுதிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தின் பத்துப் பாடல்களோடு நில்லாமல், உல கியற்றியான், வகுத்தான் வகுத்த வகையல்லால், உலகத்தார் உண்டென்பது இல்லென்பான், முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்ற குறட்பாக்களில் இறையுண்மையை, இறை வலிமையை வற்புறுத்தினார். திருக்குறளில் கடவுள் உண்மையை, வழிபாடுகளைத் திருவள்ளுவர் வலியுறுத்திக் கூறிய பிறகே, தமிழ் நூல்களில் கடவுள் வணக்கம் என்ற பாக்களைப் பிற்காலத்தில் சேர்த்து நூலுடன் எழுதப்பட்டன.

உலக மக்களும், இந்தியாவில் வாழ்ந்த வேத கால மக்களும் கடவுள் பலர் என்று கூறி வந்தார்கள். இந்திரன், சோமன், மித்திரன், வருணன் என்ற Polytheism கொள்கையைப் புகுத்தி வழிபாடு செய்து வந்தார்கள்.

திருவள்ளுவர், அந்த பல கடவுள் தத்துவத்தை மறுத்தார். "ஒன்றே தேவன்', 'இறைவன் ஒருவனே என்ற Monotheism கொள்கையை வெளியிட்டார். அந்த ஒரே இறை, 'ஆதி-பகவன் என்றார். அவரை முதலாக உடையதே உலகு என்றார்.

கடவுள் உலகமாகப் பரவியுள்ளார் என்ற Panthesin தத்துவத்தைத் திருவள்ளுவர் கண்டித்தார். ஆதி - பகவன் முதற்றே உலகு என்றார்.

கடவுள் வேறு, உலகம் வேறு. கடவுள் உலகத்திற்கு, நிமித்த காரணன் என்றும் திருவள்ளுவர் அறிவித்தார்.