பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருக்குறள் சொற்பொருள் கரபி

என்றும் இருப்பது உலகம் - எவராலும் அது உருவாக்கப்பட்டது அன்று. அது தோன்றுவதும் இல்லை; அழிவதும் இல்லை என்ற சமணர் கொள்கையை மறுத்தார்.

'உலகம் கடவுளை முதலாக உடையது; அதற்குத் தோற்றம், நிலை இறுதி என்ற மூன்று தொழில்கள் உண்டு என்பதற்குச் சான்றாக, 'உலகியற்றியான், ஆதி-பகவன் முதற்றே உலகு என்றார்.

'உயிர் என்ற ஒன்று இல்லை எந்தப் பொருளுக்கும் ஆன்மா என்பது ஒன்றும் இல்லை என்று வாதிட்ட பெளத்தர், உலகாயதர் வாதங்களைத் திருவள்ளுவர் மறுத்தார்.

'மன்னுயிர்க்கு இன்னாமை தான்.அறிவான் என்கொலோ, மன்னுயிர், 'ஓம்பி அருளாள்வர்', 'உடம்பொடு உயிரிடை நட்பு என்று தனது குறட்பாக்களில் திருவள்ளுவர் முழக்கமிட்டார்.

ஒரே ஒர் உயிர் தான் பல உடல்களிலும் இருந்து வருகின்றது என்ற Monism கொள்கையைப் போதித்தவர்களைத் திருவள்ளுவர் மறுத்தார், 'பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் என்ற குறளைத் தீட்டினார். எனவே, பல்லுயிர் உண்டு என்பதற்குப் பற்றுக்கோடாக கடவுட் கொள்கையை சான்றாக்கினார்.

கடவுள் நிறை குணங்களின் உருவம். உயிர் இயல்பாகவே அறியாமை உடையது. அது முயன்று அறிவினைப் பெற்று உயரலாம் என்பது திருவள்ளுவரது கோட்பாடு. அந்த முயற்சியில் ஈடுபடும்போது உருவாகும் வினைச் சார்புகளே வாழ்க்கை நிலைகள் என்றார்.

இதற்குச் சான்றாக, கடவுள் வாழ்த்துப் பாவில், 'இருள்சேர் இருவினையும் சேரா என்றார். 'இருள் நீங்கி இன்பம் பயக்கும்', 'மருள் நீங்கி - மாசறு காட்சியவர்க்கு என்று 65-ஆம் குறளில் குறிப்பிடுகின்றார்.

இருள் ஒரு பொருளின் உண்மைத் தன்மையை மறைப்பதைக் காட்டுகிறது. அதாவது, இறைவனை இருள் மறைத்துள்ளது. ஞானிகளின் அறிவுரைகளை ஏற்றுப் பின்பற்றி நடந்தால், இருளை - அந்த மருளை அழிக்க முடியும் என்கிறார் திருவள்ளுவர்.

ஞானியர் அறிவுரைகள் என்றால், சங்கராச்சாரியர் போன்றவர்களது இன அறிவுரைகள் கூறுவோரல்லர், திருவள்ளுவரே எங்களைத் தான் சுட்டுகிறார் என்று, மறப்பினும் ஒத்துக் கொளலாகும் என்ற 134-வது குறளையும், அறுதொழிலோர் நூன்மறப்பர் என்ற 560-வது கொடுங் கோன்மை அதிகாரச் சொற்களையும் அவர்கள் சான்றுக்கு இழுப்பார்கள்.

'அந்தணர் என்பர் அறவோர் என்ற குறட் கருத்தால் மேற்கண்ட இனவெறியை எதிர்க்கின்றார் திருவள்ளுவர். காரணம், 'மற்றெவ்வுயிர்க்கும் குளிர்ந்த அருளைச் செலுத்தும் செந்தண்மை அந்த இனத்திற்கு இல்லையே' என்பது தான்