பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 229

கடவுள் என்ற பெயரை - இறை என்று சுட்டுகிறோம். கடவுள் காப்பவர்! அதனால் இறை எனப்படுகிறார். அதே காக்கும் தொழில் மன்னனிடமும் அமைந்திருப்பதால், நாட்டின் காவலனும் இறை என்று கூறப்படுகிறான். அதைத்தான் இறைமாட்சி என்ற அதிகாரத்தால் திருவள்ளுவர் விளக்குகிறார்.

நாட்டைக் காப்பவன் 'இறை என்று அழைப்பதைப் போல; வீட்டைக் காக்கும் இல்லறக் காவலன் கொழுநன்’ என்ற சிறு தெய்வமாகின்றான். அதனால் தான், 'தெய்வம் தொழாஅள் என்ற குறளில் அந்தக் கருத்தைச் சுட்டுகிறார் திருவள்ளுவர்.

தெய்வம் தொழுதற்குரிய எண்வகைப் பொருட்களான நிலம், நீர், தீ, உயிர், காற்று, நிலா, சூரியன், புலனாய மைந்தன் என்ற படிமுறைகளில், மண் முதல் விண் வரையுள்ள ஐந்தும் பஞ்சபூத சக்திகளாகும், நிலா, சூரியன் இரண்டும் ஒளி வழங்கும் பொருட்களாக, தனிப்பட எங்கும் தோன்றுவன. இவற்றுக்கெல்லாம் மேம்படும் இறை - வானுறை தெய்வமாகும்.

கணவன் மனைவி இருவரும் ஞான மெய்யடியார்களைத் தொழுபவர் கள். மனைவிக்கு கணவன் உடனுறையும் தெய்வமாவான். பிற தெய்வங் களாகிய சூரியன், நிலா, வானுறை தெய்வம் ஆகியவற்றைத் தொழாமல், கணவனைத் தெய்வமாகத் தொழல் வேண்டும். தெய்வமாக எண்ணி வழிப்படல் வேண்டும். இது பாவனை, பாவனைப் பயன், பாவிப்போர்க்கும், பாவிக்கப்படும் பொருளுக்கும் வந்து சேருமாதலால், தெய்வம் தொழாள் கொழுநனைத் தொழுவாள் என்ற பாவனை கூறப்பட்டது.

தொல்காப்பியர், இன்பமும் - பொருளும் - அறனும் - என்றாங்கு, அன்பொடு புணர்ந்து ஐந்தினை மருங்கின்' என்றார்.

திருவள்ளுவர் பெருமான், தொல்காப்பியரால் மூன்றாவதாக எண்ணப்பட்ட 'அறத்தை, திருக்குறளின் முதலாவது பால் ஆக வைத்தார். அறமே வாழ்க்கைக்கு முதன்மையானது என்பதால், அவர் எழுதிய குறட்பாவில் அறத்தை முன்னிறுத்தி, தொல்காப்பியரின் இன்பமே, முதன்மை என்ற குறிக்கோளை மறுத்தார்.

அதற்குச் சான்றாக, 'அறத்தான் வருவதே இன்பம்; மற்றெல்லாம் புறத்த புகழும் இல என்றார். தனி மனித வாழ்வுக்கு இன்பமே சமுதாய வாழ்க்கைக்கு அறமே முதன்மை - என்பதை நிலை நாட்டியவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் ஏற்றிய இந்தத் தமிழர் பண்பாட்டு, நாகரீகப் புரட்சிக் கொடியை, அவருக்குப் பின்வந்த 'புறநானூறு சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும், அறத்து வழிப்பஉேம் தோற்றம் போல’ என்று வீரப்பண் பாடி - வீறுகொண்டு பறந்து கொண்டிருக்கின்றது.

இவ்வாறு, இன்றைய உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்ற மதக்கோட்பாடுகளை, தத்துவக் குறிக்கோள்களை, ஏறக்குறைய 2300