பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 237

அவற்றை ஆழ்ந்து, கூர்ந்து, ஒர்ந்து படிக்க வேண்டிய பொறுப்பு

தமிழறிவுடையார் கடமை அல்ல - உரிமை!

தமிழ் மொழியில் அத்தகைய சங்க கால நான்மறைகளும், தமிழ் மறைகளும், திருமந்திரங்களும், பாசுரங்களும், அறச்சொற்களும் ஏராளமாக உள்ளன. அவற்றின் உண்மைப் பொருளை அறிய வேண்டுமானால், அதாவது மனிதன் மனம், முழு முழுக்க ஒன்றும் இல்லாமல் மாறினாலொழிய, தன் நெஞ்சில் ஒரு துளியும் மதக் கருத்து, சாதிக் கருத்து, நாகரிகக் கருத்து, பண்பாட்டுக் கருத்து இல்லாமல் மாறினாலொழிய, திருக்குறளுக்கு உண்மைப் பொருளைக் காண முடியாது.

ஏனென்றால், திருவள்ளுவர் மனம் ஒரு திறந்தவெளி ஒன்றுமில்லாத £60601,363 (""status of nothingness and total negation without identification, secured by full freedom based on emptyness") @(5:55, softus is gloss.

எழுதிய அய்யன் திருவள்ளுவன் - இல்லாத நிலையிலிருந்தால், உரையாசிரியன் இருக்கின்ற நிலையிலிருந்தால் குறள் உரை தெளிவாக இருக்க முடியுமா?

மதமே இல்லாத மனிதனால் எழுதப்பட்ட ஒரு நூலை, சக்தி வாய்ந்த ஒரு மதத்தின் முப்பிரிவுகள், அய்யன் திருவள்ளுவரைக் குறிப்பிட்ட ஒரு மதவாதியாக்க, அதுவும் இயேசு பெருமானுக்குச் சீடராக்கி மகிழ்ந்திட அமெரிக்கப் பணமழையின் ஒருமைப்பாட்டோடு பணிகளாற்றுமா?

திருக்குறளுக்கு 空_6ög கண்ட தொல்லாசிரியர்களான காளிங்கருக்கோ, மணக்குடவருக்கோ, பரிமேலழகருக்கோ, பிறருக்கோ இப்படிப்பட்ட விவாத மன்றங்கள் இன்றுவரை கூடினவா?

பன்மொழிப் புலவர் அப்பாதுரையார், மொழி நூலறிஞர் பண்டித தேவநேயப் பாவாணர், திருக்குறள் பீடம் அழகரடிகள், திருக்குறளார் வி. முனுசாமி, கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம்பிள்ளை, தமிழ்த்தென்றல் திரு.வி.க., பாவேந்தர் பாரதிதாசனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, புலவர் குழந்தை, சாமி சிதம்பரனார், டாக்டர் மு. வரதராசனார் ஆகியோரது குறட் புலமைக்குக்கூட இத்தகைய ஆய்வரங்கம் இன்றுவரை ஏற்பட்டதில்லையே! இருந்தாலும், இந்த நேரத்தில் இதே கிறிஸ்துவ அன்பர்களும் தமிழ் அடிமைகளே - கால்டுவெல்லைப் போல, ஜி.யூ. போப்பைப் போல, வீரமா முனிவரைப் போல!

கிறித்துவக் கண்ணோட்டம் திருக்குறளைப் பார்ப்பதினால், வேறொரு கோணத்தில் நோக்கும்போது, தமிழுக்கு உயர்வே கிட்டுகின்றது - அதை நாம் மறக்க முடியாது.

திருக்குறள் மத நூல் அல்ல. வாழ்க்கைக்குரிய சட்ட நூல் வள்ளுவம் கூறும் நீதி நூல்:

வேண்டுமானால் இவ்வாறு கூறலாம். அய்யன் திருவள்ளுவர் காலத்திலே ஆதிக்கம் பெற்றிருந்த வைதீக மதக் கருத்துக்களை ஏற்று,