பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 233

இப்படிப்பட்ட ஒப்பற்ற ஒரு தத்துவ விதையிலே இருந்து, உலக மூலச் சக்தியிலே பிறந்து, விளக்க முடியாத ஒருவராகி, தமிழ் எழுத்துக்களால் வாழ்வறிவு வண்ண மாயங்களைச் செய்த ஒரு மனிதரை - புலவர் தெய்வநாயகம் மத விசாரணை விசாரிக்க வந்திருக்கிறார்.

இந்த விசாரணையில், நீங்கள் பெற்ற பட்டங்களை அடகு வைப்பீர்களோ! - மீட்டுக் கொள்வீர்களோ - அது எனக்குத் தெரியாது.

மனித இனம் இருக்கின்றதே, இந்தியாவைப் பொறுத்தவரை - அது ஏழாயிரம் - எண்ணாயிரம் ஆண்டுகளின் சரக்கு:

அதற்குமேல் சரித்திரமில்லை - அதனால், இவனுக்குப் புரிந்து கொள்ள முடியவில்லை.

திருக்குறளின் எழுத்துக்கள் - வைதீக அடிப்படையில், வானத்தி லிருந்து வந்தவையென்று புளுக எனக்கு விருப்பமில்லை - என்னால் முடியாது. மிருகத்தைவிட - ஒரு மனிதன், மனிதத்தில் ஒரு மனிதன், இவ்வளவு தான் சிந்திருத்திருப்பான் என்பது எனக்குத் தெரியும். ஆனால், திருக்குறளின் எழுத்துக்களில், நீண்ட காலச் சரித்திரமோ, குறுகிய கால இலக்கியமோ, தெரிவதற்கு பதில், இனி முட்டைக்குள் முட்டையாக இருந்து முகிழ்ப்பதற்கு காலம் பார்த்துக் கொண்டிருக்கின்ற மனித வர்க்கத்தை, நீ இப்படித்தான், இருப்பாயென்று, அறுதியிட்டு உறுதியாகச் சொல்லுகின்ற இறுதி ஆற்றல் - அந்த நெசவாளிக்கு மட்டும் எப்படி முடிந்தது!

அவருக்கென்று ஒரு மதம் இல்லை, அவ்வளவு தானே ஒழிய, வேறு என்னவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தகைய திருவள்ளுவரை இந்த ஆய்வு மாநாடு என்ற போர்க் களத் தில் நீங்களும் சந்திக்கின்றீர்கள் - புலவர் தெய்வநாயகமும் சந்திக்கின்றார். நீங்கள் இருவரும், காலமாகிக் காணாமல், காற்றிலே கலந்த திருவள்ளுவரைத் தேடுவதற்காக முனைகின்றீர்கள்.

பார்வை ஒழுங்காக இருப்பவர்களுக்கே பாதாளம் தெரியும் என்றான் அரிஸ்டாட்டில்.

திருக்குறள் ஆழத்தை நோக்கி இறங்குவதற்கு வந்திருக்கின்ற தண்டமிழ்ச் சான்றோர்களே!

உங்கள் முன்னாலே விரிக்கப்பட்ட ஆறு கிறித்துவப் புத்தகங்கள் வழியாக, நீங்கள் உதிர்க்கின்ற கருத்துக்கள், இருபதாம் நூற்றாண்டுத் திருவள்ளுவரைக் காட்டுவதற்காகவாவது அமைய வேண்டும் என்பது என் போன்றோரின் ஆசையாகும்.

பல நூற்றாண்டுகட்கு ஒரு வள்ளுவராகப் பிறப்பவர் தான் திருவள்ளுவர்!