பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருக்குறள் சொற்பொருள் சுரபி

இதுவரையில், கடவுள்தான் நினைவில் நிற்பவன் என்று தத்துவங்கள் கூறுகின்றன.

வேதங்களையும், அதற்குச் சாட்சியாகக் கோயிலையும், பூசையையும் காட்டுகின்றனர் வேதாந்திகள்:

அருள் கூர்ந்து, நீங்கள் அய்யன் திருவள்ளுவரைக் கோயிலில் இல்லா இறைவனாக, பூசையில்லா இறைவனாக, மனிதநேய மனிதத்தில் மணக்கும் மனமாகக் காட்ட வேண்டுமென்று விரும்புகின்றேன்.

திருவள்ளுவர் கிறித்துவரா? என்ற வினாவை எழுப்பி; அதற்காகப் பொருட் செலவு செய்து தோல்வி பெறுவதைவிட, அருட்திரு. டாக்டர். go.g. Gümü elsuffāsīt, "Humility, Charity and forgiveness of injuries being christian qualities are not described by aristle.... Now these three are foorcibly inculcated by the Tamil moralists these are the themes of his finest verses. So far, then we may call this Tamil poet a christian"

'அடக்கம், அறம், பாவமன்னிப்பு என்பன கிறித்துவ இலட்சியங்களாக இருந்தும்கூட, அவற்றை அரிஸ்டாட்டில் தமது நூலில் குறிப்பிடவில்லை.

தமிழ் அறநெறியாளரான திருவள்ளுவர், இந்த மூன்றையும் மிக வலிமையாக மக்கள் மனத்தில் பதிய வைத்துள்ளார். அவருடைய அருமையான செய்யுட்களுக்கு - இவைதாம் ஆய்வுப் பொருட்களாக உள்ளன. எனவே, நாம் அந்தத் தமிழ்க் கவிஞரை ஒரு கிறித்துவர் என்றே அழைக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

திரு. டாக்டர். போப் அவர்கள் கிறித்துவத் திருமறைக் காவலராக இருந்ததினால்தான். May Call என்ற வார்த்தையை ஆட்சி செய்துள்ளார். திருக்குறள் ஆய்வு மாநாட்டினர்களைப் போல, திருவள்ளுவரைக் கிறித்துவராக ஆக்கிட விரும்பவில்லை. காரணம், அவர் ஒரு மத எல்லையின் காவலராக இருந்ததால், தன்னை உயர்த்திக் கொண்டார்.

'உலக பார்வையில் தமிழ் மறை என்ற தலைப்பில், இக்கட்டுரையை எழுதும்போது, சென்னையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுச் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டேன் என்றால், இந்த மாநாட்டில் திருவள்ளுவர் கிறித்துவரல்லர் என்ற இந்த மாநாட்டின் முடிவை, சென்னை மாநாட்டார் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்கு வெளியிட வழங்காமல் இரும்புத் திரையிட்டு மறைத்து விட்டார்கள்.

எனவே, திருவள்ளுவர் பெருமானுடைய பாதை - மக்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தனி ஒரு பாதை பொதுவான பாதை: - யாரையும், எவரையும் நல்வாழ்க்கைப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அறம் சார்ந்த பாதை நம்பி ஏற்கத் தகுந்த துணிந்த உலகத் தமிழ்மறைப் பாதையாகும்.

- புலவர் என்.வி. கலைமணி, எம்.ஏ.,