பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையோடு விஞ்ஞானம் இணைந்த நூல் திருக்குறள்

அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும், இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்பு இயைந்திருக்கக் கூடியனவும், ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது. வள்ளுவர் திருக்குறள்.

குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லாரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியுள்ளது.

மனித சமுதாயத்திற்கே நல்வழி காட்டி, நன்னெறியூட்டி, நற்பண்புகளையும், ஒழுக்கங்களையும் கற்பிக்கும் வகையில் எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள்.

எனவேதான், எல்லா மக்களும், எல்லா மதத்தவரும் எங்கள் குறள், எங்கள் மதக் கருத்தை ஒப்புக் கொள்ளும் குறள் என்றெல்லாம் அதைப் போற்றி வருகிறார்கள்.

ஆரியக் கலை, பண்பு, ஒழுக்கம், நெறிகள் முதலியவைகளுக்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம் மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் எனது உறுதியான கருத்தாகும்.

வள்ளுவரையும், நாம் ஒரு மனிதராக மதித்தே, மக்களிடையே காணப்படும் இழிவு நீங்கி மனிதத் தன்மை வளர்ந்தோங்க வேண்டும் என்ற கருத்தோடு பாடுப்பட்ட ஒரு பெரியாராக மதித்தே - நாம் குறளை ஒப்புக் கொள்கிறோமே ஒழிய, அதை நாம் கடவுள் வாக்காகவோ, அசரீரி வாக்காகவோ ஏற்றுக் கொள்ளவில்லை.

நீங்கள் என்ன சமயத்தார் என்று கேட்டால் - வள்ளுவர் சமயம் என்று சொல்லுங்கள்; உங்கள் நெறி என்னவென்றால் குறள் நெறி என்று கூறுங்கள். அப்படிச் சொன்னால் எந்தப் பிற்போக்குவாதியும் எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரரும் எதிர்நிற்க மாட்டான் யாரும் குறளை மறுக்க முடியாததே இதற்குக் காரணம்.

ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து - மறுப்பு திருக்குறள்தான். திருவள்ளுவ மாலையில் பல புலவர்களே இதைக் கூறியுள்ளனர்.