பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருக்குறள் சொற்பொருள் சுரபி

ஆரியப் புரட்டை வெளியாக்கி மடமையைப் போக்கும் நூலே திருக்குறள். ஆதலால், குறள் வழி நின்று பகுத்தறிவு பெற்றுப் புது மனிதனாகுங்கள்.

புராணக் கருத்துக்களிலும், மூட நம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் நம் மக்களுக்குப் பகுத்தறிவு வளர்ந்த பின், மூடக் கருத்துக்கள் ஆட்டங்கண்ட பின்தான், குறளின் பொருளை உணரும் அறிவு மக்களுக்கு உண்டாகும் என்று கருதி, முதலில் வந்தேன்.

இன்று மக்களுக்குக் கொஞ்சம் அறிவுத் தெளிவு பகுத்தறிவுத் தன்மை வளர்ந்து இருக்கிறதால் இன்று குறளைப் பற்றிப் பேசுகின்றேன். அறிவு பெற்றவன், அறிவையே முதன்மையாகக் கொண்டவன், ஆலோசித்துப் பார்க்கும் ஆராய்ச்சித் தன்மை கொண்ட்வன் எவனும் குறளை மதித்தே தீருவர்ன். குறளைப் பாராட்டியே தீருவான் சிறிதாவது பின்ப்ற்றிக் குறளை வழிகாட்டியாய்க் கொண்டே தீருவான்.

குறள் வெறும் ஒழுக்கத்தையும், வாழ்க்கைக்கு வேண்டிய அனுபவப்

பூர்வமான பிரத்தியட்ச வழியையும் கொண்ட்தாகும்.

குறள் ஒரு அறிவுக் களஞ்சியம். பகுத்தறிவு மணிகளால்

கிேர்க்கிப்பீட்ட் நூல் திருக்குறள், பார்ப்பனர்களின் பித்தலாட்ட்ங்களை வெளிர்க்குவதற்கென்றே எழுதப்பட்ட நூல்.

ஆகவே, திருவள்ளுவர் ஒரு பகுத்தறிவாளியாக இருந்திருக்க o@B. அதன் ஒவ்வொரு செய்யுளும் ப்ர்ப்பனர்க்ளின் அயிேர்க்கியத் தனமைகளை விளக்குகிறது: -

- தந்தை பெரியார்

இதழ்களிலிருந்து சில குறிப்புகள்