பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 திருக்குறள் சொற்பொருள் சுரபி

'நான் இனி உன்னோடுதான் வாழ வேண்டும். ஆனால், இந்த ஊரிலே இனி நாம் வாழலாகாது. எனவே, மதுரையம்பதிக்குச் சென்று ஏதேனும் வாணிபம் நடத்திப் பிழைக்கலாம் என்று அழைத்த நேரத்தில், வாணிபத்துக்கு மூலப் பொருளாகக் காலிலே இருந்த காற்சிலம்பைக் கழற்றிக் கொடுத்து விற்றுவரச் சொன்னாள் கண்ணகி. இந்தக் கதையை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

மாதவியிடம் சிக்கி மீண்ட கோவலனிடம், கடைசிக் காலத்தில், இதோ காற்சிலம்பு என்று கூறி, கண்ணகி கழற்றிக் கொடுத்த கடைசிக் கருவூலத் தைப் போல; தமிழர்கள் வலிவிழந்து, வாழ்விழந்து, தத்தளித்த நேரத்தில் தமிழ்த் தாயின் கடைசிப் பொக்கிஷமாக நமக்குக் கிடைத்து திருக்குறள்!

இதை விற்க வேண்டிய இடத்தில் விற்றால் கிடைக்க வேண்டிய விலை கிடைக்கும் இடம் தவறி விற்றால் தலை போகும் - கோவலனைப் போலச் சாக நேரிடும் இதை எதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்குப் பயன்படுத்தினால் வாழ்வு கிடைக்கும் இல்லையேல் தாழ்வுதான் கிட்டும்! திருக்குறளை ஒவ்வொருவரும் அவரவர் கருத்துகளுக்குத் தக்கவாறு ஆராய்கிறார்கள். உதாரணமாக, அன்பர் ஆச்சாரியார் அவர்கள், கல்கி' இதழிலே திருக்குறள் விளக்கம் எழுதுகிறார்; திருவாவடுதுறை மடாதிபதியும் திருக்குறளைப் போற்றுகிறார்கள்; ஜீவானந்தமும் மாதம் ஒரு முறையாவது திருக்குறளைப் பற்றிப் பேசுகிறார் - எழுதுகிறார்; காங்கிரஸ்காரர்களும் குறளைப் பயன்படுத்துகிறார்கள்; நாமும் பயன்படுத்துகிறோம். நாம் குறளைப் பயன்படுத்துவதற்கும் மற்றவர்கள் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு உண்டு.

அவர்கள் குறளை எப்படிப் போதிக்கிறார்கள் என்றால், அறம் - பொருள் - இன்பம் என்று குறளில் வகுக்கப்பட்டுள்ளது. அறம் என்றால் தர்மம், தர்மத்தை நிலைநாட்டுவதற்குப் போதனர்களான வசிஷ்டர், வியாசர் முதலானோர் பாரதம் போன்ற தர்ம நூல்களை எழுதினார்கள். ஆகையினாலே, பாரதத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற தர்மோபதசேங்களை அனைவரும் படித்துணர வேண்டும் என்று ஆச்சாரியார் அவர்கள் சொல்லக் கூடும்.

'அறம் என்றால் தர்மம்; தர்மம் செழிக்க சமத்துவம் வேண்டும்; சமத்துவத்துக்குப் பொதுவுடைமையே அடிப்படை, அந்தப் பொதுவுடைமை பூத்துக்குலுங்கும் இரஷ்யாவைப் பாருங்கள், இரஷ்யாவைப் போல இந்நாட்டிலே ஏற்பட வேண்டுமானால் எங்களை ஆதரியுங்கள் என்று ஜீவானந்தம் சொல்லாம்:

'அறம் என்றால் தர்மம்; தர்மம் நிலைக்க சர்க்கார் சரிவர இயங்க வேண்டும்; அதற்கு அனைவரும் நிறைய வரி செலுத்த வேண்டும் என்று ஆளும் கட்சியினர் சொல்லலாம்.

'அறம் என்றால் தர்மம். தர்மம் செழிக்க சகோதரத்துவம் ஏற்பட வேண்டும். அந்தச் சகோதரத்துவம் வளர வேண்டுமானால் மதம் செழிக்க